வாழைப்பழ அல்வா
தேவையான பொருட்கள் வாழைப் பழம் – 5 சர்க்கரை – ¼ கப் நெய் – 1/2 கப்,
ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1/4 கப் முந்திரி – தேவையான அளவு உலர் திராட்சை – தேவையான அளவு
செய்முறை-முதலில் பாத்திரத்தில் நெய் தடவி தனியாக வைக்கவும். அதன் பிறகு, ஒரு நான்ஸ்டிக் பானில் நெய் விட்டு சூடாக்கி அதனுடன் மசித்த வாழைப் பழம் சேர்க்கவும். பிறகு,அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது கலவை கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.கலவை திரண்டு வரும் வரை வேக வைக்கவும். பிறகு இன்னொரு பானில் சர்க்கரை எடுத்து அதில் நீர் சேர்த்து சர்க்கரை பாகு செய்யவும். அதனை வாழைப்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு, வேறொரு பானில் நெய் சேர்த்து சூடாக்கி, பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை வறுக்கவும். பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து அல்வாவில் சேர்க்கவும். கடைசியாக ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறினால் சுவையான வாழைப்பழ அல்வா தயார்.
0
Leave a Reply