உடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலா மோர்
கோடை வெப்பத்தில் இருந்து, உடலை தற்காத்து கொள்ள மோர் உள்ளது. மசாலா பொருட்கள் நிறைந்த மோரை குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சி தரும் மசாலா நீர் மோர் செய்ய கெட்டியான புளித்த தயிர், மூன்று கொத்து பச்சை கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு.
மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிரை சேர்த்துக் கொள்ளவும். அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். நன்றாக அரைத்த பின்னர் ஒரு லிட்டர் தண்ணீரை மீண்டும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயப்பொடியை சேர்த்து கொள்ளவும். தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகளை சேர்த்தோ அல்லது காராபூந்தியை சேர்த்தோ சுவையான மசாலா மோரை பருகவும்.
மோரில்90% நீர்ச்சத்து நிறைந்து உள்ளது. ஒரு கப் மோரில்8 கிராம் புரதம் உள்ளது..எலும்பை வலுப்படுத்தும்கால்சியம் மோரில் ஏராளமாக உள்ளது. மோரில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது. மோரில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன.நோயெதிர்ப்பு, வளர்சிதை மாற்றத்தில்,முக்கிய பங்கு வகிக்கிறது.மோரில்இரத்த அழுத்த அளவை பராமரிக்கவும், தசை மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டை ஊக்கப்படுத்தவும், பொட்டாசியம் உள்ளது. செரிமான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.மோரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.மோரில் உள்ள கலோரிகள் மற்ற உணவுகளை ஒப்பிடும் போது குறைவாக உள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்களுக்கும், இருக்கும் எடையை சீராக்க விரும்புபவர்களுக்கும் ஏற்ற உணவாக உள்ளது.
0
Leave a Reply