ஸ்வீட் கார்ன் பச்சடி
தேவையான பொருட்கள் -
ஸ்வீட்கார்ன் 1
கெட்டிதயிர் ஒரு கப்
பூண்டுஒரு பல்
உப்புதேவையானது
தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் 1
சர்க்கரை 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
செய்முறை: -
சோளத்தை உதிர்த்து இரண்டுநிமிடம் வாணலியில் ஒருகை தண்ணீர் தெளித்து வேக விடவும். தேங்காய், பச்சைமிளகாய் இரண்டையும் கொரகொரப்பாக அரைக்கவும். பூண்டை நசுக்கி கொள்ளவும். அதிகம்புளிப்பில்லாத தயிரில் ஸ்வீட் கான் தேங்காய் அரைத்தது உப்பு, சர்க்கரை, நசுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து கலந்துபரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
0
Leave a Reply