வெயிலுக்கேற்ற விதவிதமான தயிர் பச்சடிகள்! வெண்டைக்காய் பச்சடி
அடிக்கிற வெயிலுக்கு தண்ணீர் தவிர எது சாப்பிட்டாலும் ருசிக்காதது போலவே தோன்றும். அடுப்படியில் நிறைய நேரம் செலவிடாமல் , வேலையும் எளிதில் முடிய,அதே சமயம் வாய்க்கு ருசியாக ஒரு துவையல், தயிர் பச்சடி ஒன்றையும் செய்துவிட சாப்பாடு நன்கு இறங்கும், ருசியாகவும் இருக்கும், வேலையும் எளிதில் முடிந்து விடும்.
வெண்டைக்காய் பச்சடி
வெண்டைக்காய் 100 கிராம்
கெட்டிதயிர் ஒரு கப்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
பொடிஉப்பு தேவையானது
தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய்
அலங்கரிக்க: பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
வெண்டைக்காயை கழுவி மெல்லிய துண்டுகளாக நறுக்கிஎண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். தேங்காய் பச்சைமிளகாய் இரண்டையும் அரைத்துஅதிகம் புளிப்பில்லாத தயிரில்கலந்து உப்பு சேர்க்கவும். கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவிவிடவும். பரிமாறுவதற்கு முன்புபொரித்த வெண்டைக்காய்களை தயிர்கலவையில் சேர்த்து பரிமாறவும். ருசியான வெண்டைக்காய் பச்சடி தயார். இதனை துவையல் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்..
0
Leave a Reply