முளைகட்டிய பயறு அடை
தேவையான பொருட்கள்-
அடை மாவு செய்ய
2 கப் முளைகட்டிய பயறு வகைகள் ,
1 கப் இட்லி அரிசி,
1கப்பச்சரிசி,
3/4 கப் உளுந்து,
சிறிதுகறிவேப்பிலை,
4 வரமிளகாய்,
10 பல் பூண்டு,
2 ஸ்பூன் சீரகம்,
1 ஸ்பூன் சோம்பு,
2 துண்டு இஞ்சி,
1 மூடி தேங்காய் துருவல்,
தேவையான அளவுகல் உப்பு.
அடை வார்க்க:
4 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
2 பச்சை மிளகாய்,சிறிது கொத்தமல்லி தழை,
2 கேரட் துருவியது, சிறிது எண்ணெய்.
செய்முறை -
பச்சை பயறு,வெள்ளை தட்டபயறு,சிகப்பு தட்டப்பயறு, கொள்ளு,கருப்பு சுண்டல், மொச்சை பருப்பு, சிவப்பு ராஜ்மா ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி வெயில் படுமாறு வைக்கவும். 12 மணி நேரம் கழித்து பார்த்தால் முளைத்து இருக்கும். இதை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளவும். அரிசி உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி கூட முளைகட்டிய பயறு வகைகள் சேர்த்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.
அடை மாவு பாதி அரைப் பட்டதும் ,சோம்பு, சீரகம் ,வரமிளகாய், கறிவேப்பிலை ,பூண்டு ,இஞ்சி சேர்த்து(தேங்காய் தவிர) அரைக்கவும். பின் ஓரளவிற்கு நைசானதும் தேங்காய் துருவல் சேர்த்து கல் உப்பு சேர்த்து ஒரு முறை அரைத்து எடுக்கவும் .பின் வெங்காயம் பச்சை மிளகாயை துருவிய கேரட் ஐ சிறிது எண்ணெய் விட்டு வதக்கி இதனுடன் சேர்த்து கொள்ளவும்.
இந்த மாவை அரை மணி நேரம் வரை ஊறவிடவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றவும் .மிகவும் லேசாக தேய்க்க கூடாது. மெல்லிய தீயில் வைத்து இரண்டு புறமும் எண்ணெய் விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான முளைகட்டிய பயறு அடை ரெடி.
0
Leave a Reply