.ஓட்ஸ் பொங்கல்.
.தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப், சிறுபருப்பு - 1 கப், சீரகம் -1 டீஸ்பூன், மிளகு -1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை -6
செய்முறை:
ஒட்சை ஒரு பாத்திரத்தில் வாசனை வரும் வரை வறுக்கவும். ஒரு கப் சிறு பருப்பை 2 டம்ளர்
தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வேகவைத்த பருப்பை ஒட்சுடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதை 3 இல் இருந்து 5
நிமிடம் வரை ஓரளவு கெட்டி பதம் வரும் வரை கிளறவும்.
ஒரு பாத்திரத்தில் நெய்யுடன் மிளகு, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.
அதனுடன் சிறிது முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாளித்த மிளகு, சீரகத்தை ஓட்சில் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இப்போது சுவையான,
சத்தான ஓட்ஸ் பொங்கல் தயார்.
0
Leave a Reply