.திணை அரிசி பணியாரம்.
தேவையான பொருட்கள் -
1 கப் திணை அரிசி,
1/4 கப் உளுந்து,
தேவையானஅளவு உப்பு,
தேவையானஅளவுஎண்ணெய்.
தாளிப்பதற்கு -
1 பெரிய வெங்காயம்,
1/4 தேக்கரண்டி கடுகு,
1மேஜைக் கரண்டிகடலை பருப்பு,
3 காய்ந்த மிளகாய்,
2மேஜைக் கரண்டி எண்ணெய்,
1/2 தேக்கரண்டி சீரகம்,
கருவேப்பிலை,
செய்முறை -
திணை அரிசி மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ,நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், தயார் செய்துள்ள மாவில் சேர்த்து கலக்கவும்.
மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து குழி பணியாரம் மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.
குழிப் பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு முறுகலாக சுட்டு எடுக்கவும்.
மிகவும் ஆரோக்கியமான திணை அரிசி குழிப்பணியாரம் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
0
Leave a Reply