25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சாத்தூர் நகராட்சி மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாத்தூர் நகராட்சி மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, IAS., அவர்கள் (12.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி சாத்தூர் நகராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நகராட்சி சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டு, பழுதாகியுள்ள சாலையின்  (Potholes and Patch Work) பணியினை விரைந்து துவங்கி, முடித்திட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர்வெம்பக்கோட்டைஊராட்சிஒன்றியத்தில்,கீழகோதைநாச்சியார்புரத்தில்சாத்தூர்,திருவேங்கடபுரம்ஊரகசாலையினையும்,வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி - பேரநாயக்கன்பட்டி ஊரக சாலையினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பழுதாகியுள்ள சாலையின்  (Potholes and Patch Work) பணிகளை விரைந்து துவங்கி, முடித்திட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், எட்டநாயக்கன்பட்டி கிராமத்தில் கனிமவள நிதியின் கீழ் ரூ.34 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.85 லட்சம் மதிப்பில் சுப்பிரமணியபுரம் - தாயில்பட்டி சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும்,தாயில்பட்டியில் 15ஆவது மானியக்குழு நிதியின் கீழ் ரூ.41.35 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையர், உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News