ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா .
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. தேனியில் நடைபெற்ற படப்பிடிப்பு தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தனது இசை தொடர்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், “ஜெர்மனியில் தமிழ் கர்ப்பிணி ஒருவருக்கு வயிற்றில் குழந்தையின் அசைவுகள் நின்றதால், அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு பரிசோதித்தபோது, குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரியவந்தது. இது உண்மை சம்பவம்.
இசையமைப்பது என் வேலை. அதைத்தான் சரஸ்வதி எனக்கு கொடுத்திருக்கிறார்” என்றார்.
0
Leave a Reply