25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரைக்கீரை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரைக்கீரை

ஆரைக்கீரைகுளிர்ச்சியை உண்டு பண்ணக்கூடியது.மழை மற்றும் குளிர் காலத்தில் தான் இந்த கீரை எங்கும் கிடைக்கும், கோடை காலத்தில் கிடைப்பது அரிது.

நீர் நிலைத்து நிற்கும்  இடத்தில் செழித்து வளரும், கீரையின் ஒரே நரம்பின் உச்சியில், நான்கு இலைகளுடன் காணப்படும்.

பச்சை நிறத்துடன் மெல்லியதாகவும், வட்டமாக இருக்கும், சமைத்தால் புளிப்பு ருசியுள்ளதாக இருக்கும், இதற்கு புளியாரை என்று கூறுவார்கள்.

ஆரைக்கீரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிடலாம், சாம்பார் அல்லது சின்ன வெங்காயம் சேர்த்து பொறியலாகவும் செய்யலாம்'.சிலருக்கு அடிக்கடி அதிக அளவில் சிறுநீர் இறங்கும், இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கட்டுப்பட்டு, சரியான அளவில் வெளியேறும்.

சிலருக்கு ரத்தத்தில் பித்தம் அதிகமாகி அமிலத்தன்மை ஏற்பட்டு பித்த கோளாறுகளை உண்டுபண்ணும், தொடர்ந்து இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த பிரமேகம் நோய் முற்றிலும் குணமாகும்.

பித்த கிறுகிறுப்பு, பித்த வாந்தி, தலைவலி போன்ற பித்த சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு.

இக்கீரையை உணவில் உட்கொண்டு வர, ரத்த போக்கும், வெள்ளைபாடு நிவர்த்தியாகும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News