ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் கேரட்
இயற்கையாகவே இனிப்புச் சுவை உடைய. கேரட்டைச் சமைத்து உண்பதை விடப் பச்சையாகச் சாப்பிடும்போது அதில் உள்ள பெரும்பாலான சத்துகள் விரயமாகாமல் உடலுக்குள் போகும்.
பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகியசத்துகள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாசியம், ஃபோலிக் அமலம், கோலின், கால்ஷியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச்சத்தும் கேரட்டில் இருக்கிறது. கண் பார்வை கூர்மையடையவும், தோல் மற்றும் எலும்பு உறுதி ஆகவும், ரத்த விருத்திக்கும் இது மிகவும் நல்லது.
வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான கண்ணுக்கும், சருமத்துக்கும், உடல் வளரச்சிக்கும் மிகவும் உதவுகிறது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு அகலும், மேலும் குடல் புண் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதால் இதய நோய்களை அண்டவே விடாது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுவதால் வாரத்தில் இரண்டு நாட்களாவது சமையலில் கேரட்டைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. பக்கவாதத்தை அண்டவிடாது.
0
Leave a Reply