25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Oct 02, 2024

நீர் நிலைகளில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையை அகற்றும் இயந்திரம்

நீர் நிலைகளில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையால் நீர் வாழ் உயிரினங்கள்  பாதிக்கப்படுகின்றன. அவற்றை அகற்றுவது சுலபமாக இல்லை. இதற்காகவே சிறிய படகு போல் இருக்கும் க்லாஸ் 3   க்ளியர்போட் (Class 3 Clearbot ) எனும் ஓர் இயந்திரத்தை பல்கலை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். நீர்நிலைகளின் மேற்பரப்பை மூடி வளரும் ஆகாயத் தாமரைஉள்ளிட்ட தாவரங்களையும் இது அகற்றும் என்பது கூடுதல் சிறப்பு. இதைத் துறைமுகம், ஏரி, குளம் ஆகிய எல்லா நீர்நிலைகளிலும் பயன்படுத்த முடியும்.இந்த இயந்திரம் மிதந்தபடியே அதன் வாய்வழியே குப்பையைச் சேகரிக்கும். 200 கிலோ வரை குப்பையைச் சேகரிக்க முடியும்.மொத்தம் 500 கிலோ குப்பை வரை இதனால் சுமந்தபடி நீ ந்தமுடியும். இதில் 3 கிலோ வாட் மணிநேரம் ( 3kWh)ஆற்றலுடைய பாட்டரி  பொருத்தப்பட்டுள்ளது. 8 மணி நேரம் தொடர்ந்து இயங்கும். இதில் சூரிய மின் தகடுகள் பொருத்தும்முயற்சியும்  நடந்து வருகிறது. 13.25 அடி நீளமும், 7.5 அடி அகலமும், 5.5 அடி உயரமும் கொண்ட இந்த இயந்திரத்தில், 1080 பிக்ஸல் கேமிரா பொருத்தப் பட்டுள்ளது. இதில் தாவரங்களை வெட்டுவதற்கென்று பிரத்யேகமான கத்திகளும் உள்ளன. இயந்திரத்தால் ஒரு நாளைக்கு  10.000 சதுர மீட்டர்  பரபப்பளவில் உள்ள குப்பையை அகற்ற முடியும்.

Oct 01, 2024

தங்கத்தை விட வெள்ளி அணிவது சிறப்பு

பெண்கள் கையில் வெள்ளி வளையல்; அல்லது வெளியிலான மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் போன்றவை அணிவது அதிர்ஷ்டத்தை தரும். அதேபோல் ஆண்களும் வெள்ளி காப்பு; பிரேஸ்லெட் போன்றவை அணிவது சுக்கிரனின் ஆதிக்கத்தை கொடுக்கும். பெண்கள் வெள்ளி மோதிரம் அணிந்தால் பணவரவு அதிகரிக்கும்.இடது கையில் மோதிர விரலில் அணிவது சிறப்பு.

Oct 01, 2024

பாவம், புண்ணியம்

நமக்கு வயதாகும்  போது கை ,கால் நோகும்.எவ்வளவு பணம் இருந்தாலும் யாராலும் நாம் வலியையும், வேதனையையும், துளி அளவு கூட மாற்றி விட முடியாது.கஷ்டங்கள் வரும் போதுதான் கடவுள் நினைவுக்கு வரும். நெருக்கடி நிலை வரும் போது வீணாக செலவழித்த பணம் ஞாபகம் வரும்.மருத்துவமனையில் இருக்கும் போதுதான் உடல் ஆரோக்கியத்தை பேணாதது புரியும்.அழும் போதுதான் ஆறுதல் சொல்ல ஆட்களை சம்பாதிக்க வில்லை என்பது புரியும்.கட்டிலில் முடங்கும் போதுதான்.நாம் செய்த தவறுகள் நினைவுக்கு வரும். இருவினை மட்டுமே நம்மை தொடரும். அது பாவம் புண்ணியம் இறுதியில் நாம் செய்ததை   வைத்து மரணம் நிகழும்.

Sep 30, 2024

35 வயதுக்குட்பட்ட இந்திய பணக்கார பிரபலங்கள் பட்டியல்

இந்தியாவில்35 வயதுக்கு உட்பட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹூருன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்(HuronResearchInstitute) வெளியிட்டுள்ளது.ஹூருன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்(HuronResearchInstitute) வெளியிட்டுள்ள35 வயதுக்கு உட்பட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 150 கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர்.இதில், 29 இளம் கோடீஸ்வரர்களுடன் பெங்களூரு முதலிடத்தை பிடித்துள்ளது. இவர்களுக்கு 100 மில்லியன் டொலர் முதல் 500 மில்லியனுக்கும் அதிகமாகச் சொத்து உள்ளது என்பதை குறிக்கிறது.இதில், தேர்டு வேவ் காபி(ThirdWaveCoffee) உரிமையாளர்கள் சுஷாந்த் கோயல், ஆயுஷ் பத்வால், ரேஸர்பே உரிமையாளர் சஷாங்க் குமார், மீஷோ (Meesho) உரிமையாளர்கள் விதித் அத்ரே, சஞ்ஜீவ் பன்ர்வா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.இந்த பட்டியலில்26 இளம் கோடீஸ்வரர்களுடன் மும்பை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஷேர்சாட் உரிமையாளரான 31 வயது அங்குஷ் சச்சிதேவ் (Ankush Sachdeva) மிகவும் இளம் கோடீஸ்வரராக அறியப்பட்டுள்ளார்.இந்த பட்டியலில் , இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பரிதா பாரிக் ஆகியோர் 32 வயது பெண் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.இந்த பட்டியலில் மொத்தம்7 பெண் கோடீஸ்வரர்கள் இடம் பிடித்துள்ளனர். இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்த 13 பேரும், மும்பை ஐ.ஐ.டி.,யில் 13 பேரும் இடம்பெற்றுள்ளனர்.    

Sep 28, 2024

மருத்துவரிடம் சென்றால் நாக்கை ஏன் நீட்டச் சொல்கிறார் ?

மஞ்சள்: வயிறு அல்லது கல்லீரல் சம்பந்தமான நோய். காபி நிற படிவு: நுரையீரல் பாதிப்பு . ரோஸ் நிறம்: ஆரோக்கியமான உடல். இளம் சிகப்பு: இதயம் மற்றும் இரத்தம் சார்ந்த நோய். சிமெண்ட் நிறம்: செரிமானம் மற்றும் மூலநோய் .  வெளீர் வெள்ளை: உடல் நீர்  வற்றிப் போகுதல் மற்றும் நுண்ணிய கிருமிகளால் தொற்று காய்ச்சல் . நீலம் - சிறுநீரக பாதிப்பு .

Sep 28, 2024

கோடிகளில் விலைபோன கல்

ஐரோப்பாவின் ரோமானியாவில் மூதாட்டி ஒருவர் கதவு மூடாமல் இருப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பழைய கல், சுமார் ₹8.4 கோடி விலைபோயுள்ளதுஅரியவகை பிசின் கட்டி என்று தெரியாமல் பல வருடங்களாக அது கல்லாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மூதாட்டியின் மறைவுக்குப் பிறகு அவரின்உறவினர் ஒருவர் அதனை கண்டறிந்து விற்றுள்ளார்.

Sep 28, 2024

கருணை உள்ளம்  டாக்டர் சாந்தா

புகழ்பெற்ற புற்று நோய் மருத்துவ நிபுணர் சென்னை அடையாறு புற்று நோய்க் கழகத்தின் தலைவர்   பன்னிரெண்டு படுக்கைகளுடன் டாக்டர் சாந்தா மற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டே மருத்துவர்களுடன் தொடங்கிய இந்தப் புற்று நோய் மருத்துவமனை இன்று மிகப்பெரிய அளவில் விரிவரைந்துள்ளது.  மகஸேஸே விருது பத்மபஷண் விருது போன்ற விருதுகள் இவரை நாடி வந்துள்ளன.  அரசு மருத்துவர்களுக்கான பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை வெற்றிகரமாக முடித்தபோது அவருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் காலத்தில் மருத்துவத்தில் முது நிலை பயின்ற பெண்கள் மகளிர் நலப் பிரிவில்தான் வேலை செய்வார்கள். ஆனால் சாந்தா புற்று நோய்க் கழகத்தின் முக்கிய மருத்துவராக சேர்ந்தார்.  அவரது குடும்பத்தினருக்கே கூட இதில் கருத்து வேறுபாடுகள்  உண்டாம்.  உடல் நலத்துக்கான தமிழக திட்டக் கமிஷனில் டாக்டர் சாந்தா ஓர் உறுப்பினர்.  தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியில் இவர் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்.  நோபல் விருது பெற்ற டாக்டர் சந்திரசேகர்  சி வி ராமன்  ஆகியோர் சாந்தாவின் நெருங்கிய உறவினர்கள். தன் மருத்துவச் சேவையில் நிறைவு உண்டு .ஆனால் தாத்தாவின் ஆசையான நீ வயலின் கத்துக்கோ எனக்  கூறி, நடைமுறைப்படுத்தாததில் கொஞ்சம் வருத்தம் உண்டாம் இவருக்கு. மகஸேஸே விருது இவருக்கு வழங்கப்பட்ட போது அதில் 87 வயதான சாந்தா நோயாளிகளைப் பார்க்கிறார்.  இன்னமும் அறுவைச் சிகிச்சைகளைச் செய்கிறார்.  இன்னமும் ஒரு நாளின் எந்த நேரத்திலும் தன் கடமையைச் செய்ய தயாராக இருந்தார் என்று எழுதப்பட்டிருந்தது. 2021 — 60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, இப்படி ஒரு தமிழ்ப்பெண்மணி நம்மிடையே இருந்தது நமக்கு பெரும் பெருமை.

Sep 28, 2024

தானம் என்பது என்ன? தர்மம் என்பது என்ன?

ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து செய்வதற்கு பெயர்தான் - தானம் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செய்வதற்கு பெயர்தான் - தர்மம்.

Sep 28, 2024

விமான துறையில் விரைவில் அதானி குழுமம்

விமான போக்குவரத்து துறையில் கூட்டணி ஏற்படுத்தும் வாய்ப்புகள் தொடர்பாக, கனடாவை சேர்ந்த ஜெட் விமான தயாரிப்பாளரான ''பம்பார்டியர்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டலை, 'அதானி' குழுமத் தலைவர், கவுதம் அதானி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதானி, இந்திய விமான போக்குவரத்து துறைக்கு வலுவூட்டும் முயற்சியாக, இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறி யுள்ளார். விமான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் ராணுவ விமானங்கள் துறையில் தங்கள் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் பேசியதாக கூறப்பட்டுள்ளது.

Sep 28, 2024

'மேக் இன் இந்தியா' 10 ஆண்டுகள் நிறைவு

கடந்த 2014ம் ஆண்டு, செப்டம்பர் 25ம் தேதி துவங்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' திட்டம்.  பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது. அன்னிய முதலீடுகளை ஈர்த்து, உள்நாட்டில் தயாரிப்பை ஊக்கப்படுத்தி, அதன் வாயிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் வாகனம், மின்னணுவியல், ஜவுளி, பாதுகாப்பு உள்ளிட்ட 25 துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.நாட்டு மக்களின் அயராத உழைப்பின் காரணமாக, இந்தியாவில் தயாரிப்போம் என்ற கனவு, ஒரு வலுவான இயக்கமாக மாறியுள்ளது. மேக் இன் இந்தியாவின் தாக்கம், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதை காட்டுகிறது.மேக் இன் இந்தியா திட்டத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. தரமான பொருட்களை தயாரித்து வழங்க அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். குறைபாடற்ற பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதோடு நின்று விடாமல், தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் உலகின் வலுவான நாடாக உருவெடுக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது , என- பிரதமர் நரேந்திர மோடி கூறி யுள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 46 47

AD's



More News