தமிழ்நாடு நாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள்
தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் ”தமிழ்நாடு நாளாகக்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது.
இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 ஆம் நாள் முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட நூலக அலுவலகத்தில் நடத்தப்பட்டன.
கட்டுரைப் போட்டிகளுக்கு வீரார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு.மு.கூடலிங்கம், மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திருமதி ப.ரேணுகாதேவி, விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு. ஞா. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர்.
பேச்சுப்போட்டிகளுக்கு, இராசபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு.இரா.மாரியப்பன், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு.வே.இராமர், ஆனைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திருமதி த.இ.முல்லைக்கொடி ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர்.
கட்டுரைப்போட்டியில் இராசபாளையம் கேசா டிமிர் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி நா.தியாஸ்ரீ முதல் பரிசாக ரூ.10000/-, சிவகாசி ஒய்.ஆர்.டி.வி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ந.ஜெயரதி காமாக் இரண்டாம் பரிசாக ரூ.7000/-, சிவகாசி, எஸ்.என்.எம். பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி இரா. தர்ஷா மூன்றாம் பரிசாக ரூ.5000/- வென்றனர்.
பேச்சுப்போட்டியில் மம்சாபுரம் பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆ.முனீஸ்வரன் முதல் பரிசாக ரூ.10000/-, சிவகாசி ஒய்.ஆர்.டி.வி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்.ஷேரன் பிரின்ஸஸ் லிடியா இரண்டாம் பரிசாக ரூ.7000/-, க.மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கா.கவிலன் மூன்றாம் பரிசாக ரூ.5000/- வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட நூலக அலுவலர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ம.சுசிலா அவர்கள் மேற்கொண்டார்.
0
Leave a Reply