நவம்பர் 2 முதல் காகிதமில்லா பத்திரப் பதிவு.
தமிழ்நாட்டில் இனி நிலம், வீடு போன்ற சொத்து ஆவணங்களைப் பதிவு செய்யக் காகிதம் தேவையில்லை. நவம்பர் 2, 2026 முதல் பத்திரப் பதிவு அலுவலகங்களில் முழுமையாக டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வருகிறது.
பயன்கள்: ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாக மின்னணு வடிவில் சேமிக்கப்படும். காகித ஆவணங்கள் தேவையில்லை என்பதால் நேரமும் செலவும் மிச்சமாகும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: நிலம், வீடு, பிளாட், வணிக இடம் போன்ற சொத்துக்களை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்ய விரும்புபவர்கள்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
- TNREGINET வலைத்தளத்தைத் திறக்கவும்.
- உங்கள் பதிவுக் கணக்கை உருவாக்கவும் (Registration).
- பத்திரப்பதிவு செய்ய வேண்டிய ஆவண விவரங்களை உள்ளிடவும்.
- கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
- பதிவு முடிந்ததும் மின்னணு சான்றிதழைப் (Registration Certificate) பெறவும்.
0
Leave a Reply