25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


மில்க் பேடா (Milk Peda).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மில்க் பேடா (Milk Peda).

தேவையான பொருட்கள் - 

1 கப் மில்க் பவுடர்,1/4 கப் சர்க்கரை,1/4 கப் பால்,1/4 கப் கோவா,

1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்,டேபிள் ஸ்பூன் நெய்,அலங்கரிக்க பிஸ்தா அல்லது பாதாம்.

 

செய்முறை  - 

பேடா செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து அதில் மில்க் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கலந்து விடவும்.

அதன் பின் நன்கு பொடித்த கோவா,பால் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கலந்தால் ஓரம் ஒட்டாமல் பிரிந்து வரும். அப்போது இறக்கி கலந்து ஆறவிடவும்.

சூடு ஆறியதும், கொஞ்சம் கெட்டியானதும், கையால் நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டவும்.

அதன்பின் உருண்டைகளை கையால் அழுத்தி,நடுவில் விரல் வைத்து அழுத்தி பேடாவை தயார் செய்யவும்.

கடைசியாக பாதாம் பருப்பு அல்லது பிஸ்தா வைத்து அழுத்தி அலங்கரிக்கவும். தயாரான பேடாக்களை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான,மிருதுவான மில்க் பேடா சுவைக்கத்தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News