கௌரி, 19 வயது இளம்பெண்ணின் சாதனை.டிகிரி கூட இல்லை.BMW நிறுவனத்தில் வேலை.
கல்லூரி பட்டத்தை விட தனித்திறமையே சிறந்தது என்பதை நிரூபிக்கும் வகையில்,19 வயது இளம் பெண் கௌரி, உலகின் முன்னணி நிறுவனமான BMW நிறுவனத்தில்மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பெற்று சாதனை படைத்துள்ளார்.
முறையான பட்டப்படிப்பு இல்லாத நிலையிலும், சமூக வலைதளங்களில் அவர் உருவாக்கிய தனித்துவமான நற்பெயரும் , அவரது படைப்பாற்றலுமே இந்த வாய்ப்பை பெற்று தந்துள்ளன.
வழக்கமாக ஐந்து ஆண்டுகள் அனுபவம் தேவைப்படும் ஒரு பணிக்கு, லிங்க்ட்இன் மற்றும் இன்ஸ்டாகிராமில் கௌரிக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பின்தொடர்பாளர்கள் ஒரு முக்கிய அங்கீகாரமாக திகழ்ந்துள்ளனர். இது தொடர்பாக கௌரி வெளியிட்ட பதிவில், தான் எந்த நிறுவனத்திற்கும் விண்ணப்பிக்கவில்லை என்றும், தனது திறமையைக் கண்டு பிஎம்டபிள்யூ நிறுவனமே தன்னை தேடி வந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திறமைக்கும் பட்டப்படிப்பிற்கும் இடையிலான விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது. தனிநபர் பிராண்டிங் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய சொத்தாக கருதப்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
இருப்பினும், சில வல்லுநர்கள் முறையான கல்வி இன்றும் அவசியம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, கௌரியின் வெற்றி பல இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
0
Leave a Reply