25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சில  மாற்றங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சில மாற்றங்கள்.

மத்திய அரசு வரும் மே1ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோக விதிகளில் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. 

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை பலமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 புதிய விதிகளின்படி, சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி நகர்ப்புறங்களில் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், ஊர்ப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. விநியோகத்தின் போது வழங்கப்படும் OTP முறையை நிரந்தரமாக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 

மேலும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மானியங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும்.

 வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப மிஸ்டு கால், வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் அல்லது மொபைல் செயலிகள் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். அதே நேரத்தில், குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு இணைப்பு வசதி உள்ள பகுதிகளில், மக்கள் அந்த முறைக்கு மாற அரசு ஊக்குவித்து வருகிறது. இத்தகைய மாற்றங்கள் எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்கவும் விநியோகத்தை சீரமைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News