25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்விக்கடன் மற்றும் தொழில் கடன்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்விக்கடன் மற்றும் தொழில் கடன்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17 மாணவர்களுக்கு ரூ.1.54 கோடி கல்விக்கடன் மற்றும் 49 பயனாளிகளுக்கு ரூ.6.45 கோடி தொழில் கடன்களை (28.10.2026) வழங்கினார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, தகுதியுள்ள மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக்கடனுதவிகளும், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் சுயதொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே மேற்கொண்டு வரும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன்று கல்வி மற்றும் தொழில் கடன் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் 17 மாணவர்களுக்கு ரூ.1.54 கோடி கல்விக்கடன் மற்றும் 49 பயனாளிகளுக்கு ரூ.6.45 கோடி சிறு மற்றும் குறு தொழில் புரிவதற்கான கடனுதவிகள் வழங்கப்பட்டது.மாவட்டத்தில் 2026-2027 நடப்பு நிதியாண்டில் பல்வேறு வங்கிகள் மூலம் இதுவரை 155 மாணவர்களுக்கு ரூ.13.67 கோடி கல்விக் கடன்களும், 18,200 பயனாளிகளுக்கு ரூ.5,397 கோடி சிறு, குறு தொழில் கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, அரசு வழங்கும் கடனுதவிகள் மற்றும் நலத்திட்டங்களை பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி, தங்களது கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மதுரை மண்டல மேலாளர் திரு.சம்பகேஸ்வர் பிரதான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாலசுப்பிரமணியன், பொது மேலாளர்(மாவட்ட தொழில் மையம்) திரு.கண்ணன், துணை இயக்குநர்(மாவட்ட தொழில் மையம்) திரு.சரவண கணேஷ், வங்கி கிளை மேலாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News