25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட இரத்தப் பரிமாற்றக் குழுக் கூட்டம் (DBTC) நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட இரத்தப் பரிமாற்றக் குழுக் கூட்டம் (DBTC) நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட இரத்தப் பரிமாற்றக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் 27.10.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் இரத்த வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் 10 முக்கிய செயல்திறன் குறியீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.முக்கிய செயல்திறன் குறியீட்டு மதிப்பீடு என்பது தனிப்பட்ட இரத்த வங்கியின் செயல்பாடாக மட்டும் இல்லாமல் அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்திறன்கள் தான் மாவட்டத்தின் மதிப்பெண்ணாகக் கணக்கிடப்படுகிறது. எனவே, அனைத்து இரத்த வங்கிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாவட்டத்தின் அனைத்து முக்கிய செயல்திறன் குறியீட்டு இலக்குகளையும் அடைய வேண்டும்.

தேசிய இரத்த பரிமாற்றுக் குழுக்கள் இரத்த சேகரிப்பை அதிகரிக்க தன்னார்வ இரத்ததான முகாம்களை அதிக அளவில் நடத்திட வேண்டும். தர உறுதிப்பாட்டு திட்டத்தில் இன்னும் இணையாத தனியார் இரத்த வங்கிகள் உடனடியாகப் பதிவு செய்து, முறையான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களைப் பராமரித்திட வேண்டும். இரத்தக் கூறுகளை தேவையான இடங்களுக்கு பிரித்து அனுப்புவதற்கு தற்போதுள்ள மையங்கள் மற்றும் கிளைகள்(Hub-and-Spoke)  மூலம் பிரித்து அனுப்பும் முறையைத் தொடர்ந்து செயல்படுத்திடவும், கூடுதல் இரத்தக் கூறுப் பிரிப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.பாரத் டிஜிட்டல் மிஷன்(ADMS) மற்றும் இரத்த வங்கி மேலாண்மை அமைப்புகளில்(BBMS) ஆதார் அடிப்படையிலான இரத்ததானப் பதிவு உள்ளிட்ட டிஜிட்டல் நடைமுறைகளை முழுமையாகச் செயல்படுத்திட தேவையான பயோமெட்ரிக் சாதனங்களை ஏற்பாடு செய்திட வேண்டும்.

கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அதிக அளவில் இரத்ததான முகாம்களை நடத்திடவும், பிற மாவட்ட இரத்த வங்கிகள் நடத்தும் முகாம்களுக்கும் முன்கூட்டியே மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து, முறையான ஒருங்கிணைப்பை உறுதிசெய்திட வேண்டும். இரத்த வங்கி உரிமம் காலாவதியாகும் தேதிக்கு குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பே புதுப்பித்தல் வேண்டும். இ-ரத்தகோஷ் (e-RaktKosh)-இல் தினசரி இரத்த இருப்பைப் பதிவு செய்திட வேண்டும்.மேலும், இரத்தப் பாதுகாப்பு கண்காணிப்பு திட்டத்தில்(HvPI) பதிவு செய்தல்,  FFP மற்றும் Cryoprecipitate தரப் பரிசோதனைகளை வலுப்படுத்திடவும், CLIA, Leukodepletion மற்றும் Irradiation வசதிகளைச் தேவையான இடங்களில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகளும் தங்களுக்குரிய குறைபாடுகளைச் சரிசெய்து, மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் உடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் ஒட்டுமொத்த முக்கிய குறியீட்டு  மதிப்பெண்ணை 100/100 ஆக உயர்த்துவதே அனைவரின் பொதுவான இலக்காக இருக்க வேண்டும்.எனவே, அனைத்து இரத்த வங்கிகளும் மேற்கண்ட நடவடிக்கைகளை முன்னுரிமையுடன் செயல்படுத்துவது மட்டுமின்றி அதன் முன்னேற்றத்தையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் அரசு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதாராணி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்)) திரு.காளிராஜ், மாவட்ட இரத்தப் பரிமாற்றக் குழு அலுவலர்  மரு ப.ஆனந்தீஷ்வரி, மூத்த மருந்து ஆய்வாளர் திரு.அய்யப்ப தாஸ், இரத்ததான முகாம் அமைப்பாளர்கள், விருதுநகர் மற்றும் சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர்கள் , அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகளின் மருத்துவ அலுவலர்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் பிரதிநிதிகள் மற்றும் இதர முக்கிய மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News