பட்ஜெட் ரூ.3 கோடி... வசூலோ ரூ.125 கோடிக்கும் மேல்!.
மனோஜ்குமார் இயக்கத்தில், ஸ்ரீராம், தபஸ்வினி பூனச்சா, ராமிகா உள்ளிட்டோரின் சிறப்பான நடிப்பில் கடந்த செப்டம்பர் 25 அன்று வெளியான கன்னடத் திரைப்படம் "பிரேமதா ஊரலி".
வெறும் ரூ. 3 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம், ரசிகர்களிடையே பெற்ற பிரம்மாண்ட ஆதரவால் திரையரங்குகளில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து, தற்போது ரூ.125 கோடிக்கும் மேல் வசூலித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
நடப்பு ஆண்டில் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, மிகப்பெரிய வசூல் மற்றும் லாபத்தைக் குவித்த திரைப்படமாக "பிரேமதா ஊரலி" திகழ்கிறது.
0
Leave a Reply