இனி செல்போன் எண்ணுடன் டிரைவிங் லைசென்ஸ்.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், ஓட்டுநர் உரிமம்(DrivingLicense) வழங்கும்நடைமுறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
வண்ணக் குறியீடுகள்: இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு வெவ்வேறு நிறங்கள் அல்லது வடிவங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
PVC அட்டைகள்: புதிதாக வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் உரிமங்கள் கட்டாயம் லேமினேட் செய்யப்பட்ட அல்லது PVC அட்டைகளாகவே இருக்க வேண்டும்.
முக்கிய விவரங்கள் சேர்க்கை: ஓட்டுநர்களின் ரத்த வகை, செல்போன் எண் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு எண் (EmergencyContact) ஆகியவை உரிமத்தில் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.
எளிய ஆவண நடைமுறை: வயது மற்றும் முகவரி முறைகேட்டைத் தடுக்க பிரமாணப் பத்திரம் அல்லது ஆயுள் காப்பீட்டுப் பாலிசி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். நோட்டரி பத்திரம் உள்ளிட்ட கூடுதல் ஆவணங்கள் இனி தேவையில்லை.
0
Leave a Reply