25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


இந்திய மகளிர் அணி தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய மகளிர் அணி தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தல்.

இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், நேற்று வதோதராவில் 3வது போட்டி நடைபெற்றது.

'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 39.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. எளிதான இலக்கை நோக்கிய இந்திய அணி, 17 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி கோப்பையை வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News