'சாகஸ்' நோய் உண்டாக்கும்முத்தமிடும் பூச்சி.
முத்தமிடும் பூச்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நடுங்க வைத்திருக்கிறது. டிரைப்நோசோமா என்ற கிருமி வகையை சேர்ந்த 'சாகஸ்' என்ற ஒரு நோயை இந்த பூச்சி மனிதனுக்கு உண்டாக்குகிறது.
மனித உடலில் இருக்கும் காயங்களில் இந்த பூச்சி அதன் கழிவுகளை வெளியிடுகிறது.
இந்த கழிவுகளால் ஏற்படும் அரிப்பை நீக்க காயங்களை ஒட்டிய பகுதியில் விரல்களை வைத்து தேய்க்கும் போது, இந்த கிருமி கைகள் வழியாக வாய், கண்கள் மூலம் மனித உடலின் உள்ளே புகுந்து விடுகிறது.
சாகஸ் நோய் பாதித்த ஆரம்ப கட்ட த்தில் சில வாரங்கள் அல்லது மாதங்கள், காய்ச்சல், தலைவலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும், சில நேரங்களில் அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். நாள்பட்ட கட்டத்தில் இந்த நோய் இதய செயலிழப்பு, இதய வீக்கம், செரிமான குழாய்பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால சிக்கல்களை ஏற்படுத்தும்.
இந்த நோய் அர்ஜென்டினா, பிரேசில்,மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் பரவி ,அமெரிக்காவின் சில மாநிலங்கள், ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய பகுதிகளிலும் பரவி வருகிறது.
அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய், சத்தமின்றி பல்வேறு நாடு களில் பரவி வருகிறது. காடு அழிப்பு, நகரமயமாக்கல் போன்ற நோய்களுக்கு முக்கி காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலக நாடுகள் பலவும் இதனை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
0
Leave a Reply