25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஓவிய, சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் துவக்கி வைத்தார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஓவிய, சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய, சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.

உள்ளூர் படைப்பாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்திடவும், அவர்களது தனித்திறன்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் அதற்கான வாய்ப்புத்தளங்களை ஏற்படுத்தித்தரும் பொருட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் 17.07.2026 முதல் 19.07.2026 வரை ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.

இதன் மூலம் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்த இயலவில்லை என்ற குறைகளை கலைந்திடவும், நல்ல ஓவியம் மற்றும் சிற்பங்களைக் காண வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளை தவிர்த்திடும் பொருட்டு நம் ஊரிலேயே கண்காட்சி நடைபடுத்தப்படுகிறது.

இக்குறுகிய கால பயிற்சிகளில் ஓவியம் வரைவதில் உள்ள நுணுக்கங்கள் குறித்த பயிற்சியும், சிற்பங்கள் உருவாக்குவதற்கான சிற்பக்கலைக்கான பயிற்சி பட்டறையும் நடத்தப்படுகிறது.இதனை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மண்டலக் கலை பண்பாட்டு துறை  திரு. து.சிவப்புகழ் (உதவி இயக்குநர்) அவர்கள் கலந்துகொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News