கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் வேர்க்கடலை.
வேர்க்கடலையில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை உட்கொள்வதன் மூலம் உடல் பருமனை தவிர்த்து, ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க முடியும்.வேர்க்கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துவது கொலஸ்ட்ரால் அளவைச் சமநிலைப்படுத்த உதவும். வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம் என்பதால், அளவோடு சாப்பிடுவது நல்லது.
0
Leave a Reply