25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


வாத நோய், வாயு நோய் நீங்க வெண்டைக்காய் வற்றல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாத நோய், வாயு நோய் நீங்க வெண்டைக்காய் வற்றல்

ஒருவரின் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதால் மூளைத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடல், கை, கால் செயலிழப்பதை வாதநோய் (ஸ்ட்ரோக்) என்கிறோம்.பார்வைக் குறைபாடு, மனநிலை மாற்றம், சுய உணர்வில் தடுமாற்றம், தலைவலி, குமட்டல், வாந்தி, தலைசுற்றுதல், இரட்டைப் பார்வை, உடல் உணர்வில் மாற்றம், தள்ளாட்டம், நடையில் தடுமாற்றம், வலிப்பு போன்ற தொந்தரவுகள் திடீரென ஏற்படக்கூடும். இவை வாதநோயின் பொதுவான அறிகுறிகள்.

.சிறிது வாதநாராயண இலைகளை மையாக அரைத்து, மாவுடன் கலந்து தோசை வார்த்து சாப்பிட்டால் வாதக் கோளாறுகள் நீங்கும். இதன் இலை அல்லது காம்புகளை ரசம் வைத்து அருந்தினாலும் பொரியல் செய்து சாப்பிட்டாலும் வாத நோய் விலகும்.

கைப்பிடி அளவு கோதுமை மாவை இளம் வறுப்பாக வறுத்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதத்தால் வரக்கூடிய வலிகள் மட்டுமல்லாமல் மூட்டுவலியும் விலகும்.

வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புளிச்சக்கீரையை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் வாத நோய் தணியும்.

நொச்சி வேப்பிலை இரண்டும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாகும். நொச்சி இலை மற்றும் வேப்பிலைகளை காய்ச்சி குளித்து வந்தால் வாத நோய்கள் விலகும்.

அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடியுடன் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து உணவு உண்பதற்கு முன்னர் அருந்தி வந்தால் வாயுத்தொல்லைகள் விலகிச் செல்லும்.

காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு மூன்றையும் தேவையான அளவு எடுத்து வறுத்து எடுத்து, இவற்றுடன் புதினா, வல்லாரை, புளி, உப்பு சேர்த்து அரைத்து சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்வுக் கோளாறுகள் விலகும். மலச்சிக்கலும் நீங்கும்.
 வெண்டைக்காயை பொடியாக நறுக்கி மோரில் ஊற வைத்து வெயிலில் உலர வைத்து வற்றலாக ஆனபின் சாப்பிட்டு வந்தால் வாத நோய், வாயு நோய் நீங்கும் கை கால்களில் பிடிப்பு, மூட்டு வலி நீங்கும். உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News