சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், பேராலி சாலை, ஓம் சக்தி திருமண மண்டபத்தில் (13.02.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சமூக நல ஆணையர் திருமதி ஆர்.லில்லி,I A S., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் முதியோர்களை கௌரவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், திருநங்கைகளுக்கான திட்டங்களையும், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களையும் சமூக நலத்துறை மூலம் சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறது. புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், திருமண நிதியுதவி போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி செய்து இத்துறையில் முறையாக திறம்பட நிர்வாகித்து வருகிறது.அதுபோல முதியோர் இல்லம் தொடங்கி, அரசு அங்கீகாரம் பெற்று இருந்தும் நிதியுதவி கிடைக்காமல் இருந்தாலும், புதிதாக முதியோர் இல்லம் தொடங்க வேண்டும் என்றால், விண்ணப்பிக்கும் போது அதனை முறையாக பரிசளித்து அதற்கான அனுமதியும், உதவிகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்களில் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை ஏற்று அவர்களுக்கு உணவு, உடை தங்குமிடம் உள்ளிட்டவற்றை உருவாக்கித் தந்து, அவர்கள் 21 வயது வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு என சுமார் 36 அரசு குழந்தைகள் இல்லம், 147 தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பாராமரிக்கட்டு வருகின்றனர். அவர்களுக்கும் விளையாட்டு விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களுக்கும் அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு முதல் தொழிற்பயிற்சி, ஆற்றுப்படுத்துதல், விளையாட்டு, பயிற்சி, ஓவியம், இசை போன்ற கலைகள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இந்தத் துறை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் புத்துயிர் பெற்று பல்வேறு திட்டங்கள், சட்டங்கள் குழந்தைகள் நலன், பெண்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது.இது போன்ற திட்டங்களை ஆதரவற்றவர்களுக்கும், முதியோர்களுக்கும், பெண்களுக்கும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முதியோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply