வயதான காலத்தில் தடுமாறி கீழே விழாமல் இருக்க....
வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால், முதுகு எலும்பு இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்புகள் அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. பாத்ரூம் வெளிவரும் பகுதியில்mat போட்டு வைப்பது நல்லது. நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும், கார்பெட்டில் கூட தடுக்கி விழலாம். அவர்கள் எதையாவது பிடித்து நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை காது கேட்கும் கருவி, கண்ணாடி ஆகியவற்றை டாக்டரிடம் பரிசோதித்து சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். கேட்கும் திறனும் பார்வையும் நன்றாக இருப்பது அவசியம்.நீங்கள் சாப்பிடும் மருந்து, மாத்திரைகள் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுத்தும், இவற்றினால் கீழே விழ நேரிடுமா என்று டாக்டரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.
சாப்பிட்டு விட்டோ, படுக்கையை விட்டோ சட்டென்று எழுந்திருக்காதீர்கள். இரத்த அழுத்த மாற்றங்களால் கண்கள் இருட்டிக் கொண்டு வாலாம். இதனால் தடுமாறி கீழே விழ நேரிடும். தட்ப வெப்ப நிலை மாற்றங்கள்கூட உடலின் சமநிலையைப் பாதிக்கக்கூடும். உங்களை வெயிலிலிருந்தும், குளிரிலிருந்தும் நன்றாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
பழக்கமில்லாத இடங்களில் அல்லது மேடு பள்ளமான இடங்களில் நடக்கும்போது கைத்தடி அல்லது வாக்கர் பயன்படுத்தலாம். மழை அல்லது பனி பெய்யும் காலங்களில் நடக்கும்போது அதிக கவனம் தேவை.இறுக்கமான அடிப்பகுதி கொண்ட, குறைந்த உயரமுள்ள காலணிகளை அணியுங்கள். வழவழப்பான காலணிகள் வேண்டாம். தற்போது பெரும்பாலான கட்டடங்களில் பளபளப்பான டைல்ஸ் போடுகிறார்கள். இந்தத் தரை கலபமாக வழுக்கிவிடக் கூடியது.
கைகளில் பொருட்களை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் ஏறாதீர்கள். ஒரு கையில் பொருட்களை வைத்துக்கொண்டு, மறுகையால் கைப்பிடிகளைப் பிடித்துக்கொள்ளுங்கள்.உயரமான இடங்களில் இருக்கும் பொருட்களை எடுப்பதற்கு மேஜை, ஸ்டுல் மீது ஏறாதீர்கள். அதேபோல, கீழே குனிந்து பொருட்களை எடுக்கும்போதும் கவனம் தேவை.
0
Leave a Reply