எலும்பு மற்றும் மூட்டினை உறுதி செய்ய....
அதிக எடையிருப்பின் அதைக் குறைக்க வேண்டும்.
தினமும் ஒரு மணி நேரமாவதுஉடற்பயிற்சி செய்ய வேண்டும்.
முடிந்த அளவுக்கு 30- 60 நிமிடங்கள் உடல் வெயிலில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிகமான டீ, காபி,அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
மதுவை அறவே ஒழிக்க வேண்டும்.
ஸ்டீராய்டு மாத்திரையை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும்.
சரியான காலணியை உபயோகப்படுத்த வேண்டும்.
வலிநிவாரணியை மருத்துவர் ஆலோசனையின்றி அதிக நாட்கள் உபயோகப்படுத்தக் கூடாது.
தேவைப்படும் போது கைத்தடி, வாக்கர் போன்ற உபகரணங்களைத் தயங்காமல் உபயோகிக்க வேண்டும்.
கால்சியம் அதிகமுள்ளவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை உட் கொள்ள வேண்டும்.
வலிநிவாரணி எடுத்த பிறகும் வலி குறையாமல் இருந்தால் மருத்துவரை உடனே நாட வேண்டும்.
ஒரு சில யோகப் பயிற்சிகள் மூலமும் எலும்பை வலிமையடையச் செய்யலாம்.
வைட்டமின் டி உணவில் உள்ள சுண்ணாம்பு சத்தை எலும்பில் சேர உதவுகிறது. தினமும் சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பதன் மூலமும், மீன், முட்டைக் கரு, கல்லீரல்,பால் போன்றவை உட்கொள்வதன் மூலமும் வைட்டமின் டி கிடைக்கிறது.
0
Leave a Reply