மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து மூத்த குடிமக்களின் நலனுக்கான சட்டங்கள், சலுகைகள்.
மூத்தகுடிமக்களின் பாதுகாப்பான கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து மூத்த குடிமக்களின் நலனுக்கான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்து செயல்ப டுத்தி வருகிறது.
மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை, சேமிப்புகளுக்கு கூடுதல் வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுவதோடு அவசரகால மீட்பு, மனநல ஆலோசனை, நலத்திட்டங்கள், முதியோர் இல்லம் பற் றிய விவரங்களை வழங்குவதற்காக 14567 என்ற சிறப்பு உதவி எண் அறிவிக் கப்பட்டு உள்ளது.
அதில் தொடர்பு கொண்டால் நமது பெயர், முகவரியை கேட்டு அறிந்து கொண்டு, நமக்கு என்ன குறை? என்று கேட்பார்கள். பிள்ளைகள் சரியாக பராமரிப்பது இல்லையா? மருத்துவரீதியிலான பிரச்சினைகளா? ஓய்வூதியம் பெறுவதில் ஏதாவது தடை உள்ளதா? வங்கி தொடர்பான பிரச்சினைகளா? என்றெல் லாம் விசாரிப்பார்கள்.
எனவே முதியோர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தால், அவற்றை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
முதியோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த சேவையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் மூத்த குடிமக்களுக்கென்று மத்திய அரசு தனி யாக அடையாள அட்டை வழங்குகிறது. உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பித்து அந்த அட்டையைபெற்றுக்கொண் டால், மருத்துவ வசதி மற்றும் அரசின் திட்டங்களில் பல் வேறு சலுகைகளை பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கு, ரெயிலில் பயணம் செய்ய வழங்கப்பட்டு இருந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
0
Leave a Reply