25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


செயல்பாட்டிற்கு  வராத அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செயல்பாட்டிற்கு  வராத அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்.

 ராஜபாளையத்தில், அமைக்கப்பட்டு வரும் 864 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் துவங்கி 4 ஆண்டுகள் கடந்தும் ஒப்படைப்பு பணிகள் முடியாதது, குறித்து  ஏக்கத்தில் உள்ளனர். வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 3 மாடிகளுடன் 15 பிளாக்குகளாக மொத்தம் 864 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது.

ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோட்டில் இடம் தேர்வு செய்து கடந்த 2020 மே மாதம். பூமி பூஜை நடந்து.  கட்டுமானப்பணி கொரோனாவால் தாமதமானது. பின் கட்டட பணி முடிந்தும்  மின் இணைப்பு வழங்காதது, பூங்கா அமைப்பதில் தாமதம், தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் முடிவு பெறாதது என பல்வேறு காரணங்களால் தாமதமாகி கட்டட பணிகளுக்கு அடுத்து பயனாளிகள் தேர்வு, ஒப்படைப்பு என தாமதம் தொடர்கிறது. பல கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் விரைந்து ஒப்படைக்க வேண்டும். கடந்த ஆண்டு பிப். மாதம் பணிகள் முடிந்தும் தற்போது வரை தாமதிப்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News