இளைஞர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை ஆற்று ஓரங்களில் போட்டு உடைப்பதும், தோப்புகளில் திறந்தவெளி மது கூடங்களாக மாற்றும் அவலம்
மலையை ஒட்டி அய்யனார் கோயில், சேத்துார், தேவதானம் பகுதிகளில் மழைக்காலங்களில் ஆற்று நீர் வரத்து உள்ளது.இவற்றில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர பல கி.மீ., தொலைவு உள்ள ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை சேர்த்து வருகின்றனர்.
இளைஞர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை ஆற்று ஓரங்களில் போட்டு உடைப்பதும், தோப்புகளில் திறந்தவெளி மது கூடங்களாக மாற்றும் அவலம் நடந்து வருகிறது.
மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி விட்டு செல்வதால் யானைகள், மான்கள்உள்ளிட்ட வனவிலங்குகளின் கால்கள் சேதமாகி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
செயல்படாமல் உள்ள செக்போஸ்டை கண்காணித்து நடைமுறைக்கு கொண்டு வரவும், வருவாய்த்துறை போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்கவும், பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply