சாலை ஓரம் நிறுத்தப்படும் பஸ்களால் விபத்து அபாயம்.
ராஜபாளையம் நகர்பகுதியில் செல்லும் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். கர் ஏற்கனவே நீண்ட வருடங் களாக ஆக்கிரமிப்பு அகற்றாமலும், சாலையோர மின் கம்பங்களை ஓரமாக நகற்றி வைக்காமலும் ரோட்டின் அகலம் குறைந்துள்ளது.
இந்நிலையில் பஞ்சு மார்க்கெட் அடுத்த வளைவு பகுதியில் அரசு, தனியார் பஸ்கள் நெடுஞ்சாலை ஓரத்தையே, வரிசையாக டிப்போவாக மாற்றி வைத்துள்ளனர். இதனால் விபத்துகள் நிகழ்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கிராமப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் டிரிப் முடிந்து மீண்டும் இயக்குவதற்கு நிறுத்த இடமின்றி இவ்வாறு செய்கின்றனர்.
இதனால் வெளியூரிலிருந்து புதிதாக வரும் லாரிகள், சுற்றுலா பஸ் கள், கனரக வாகனங்கள் வளைவில் முந்தும்போது விபத்துகளை சந்திக்க நேர்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடியும் வரை விபத்துகளை தடுக்கும் வகையில் பஸ்களை மாற்று இடத்தில் நிறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply