25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பஸ் வசதி இன்றி தென்றல் நகரில் ராஜபாளையம் மக்கள் தவிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பஸ் வசதி இன்றி தென்றல் நகரில் ராஜபாளையம் மக்கள் தவிப்பு

ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அடுத்த செண்பகத்தோப்பு ரோட்டில் 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.நகர் பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில்  அமைந்துள்ள இங்கிருந்து பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலைகள் வியாபார நிறுவனங்களுக்கு செல்ல முறையான அரசு பஸ் போக்குவரத்து, மினிபஸ்  போன்ற வாகன வசதி இன்றி தவிக்கின்றனர்.

 அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர், ராம் நகர், இந்திரா நகர், பச்சை காலனி, சக்தி நகர், சாஸ்திரி நகர், பேங்கர்ஸ் காலனி, தென்றல் நகர், சமத்துவபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல ஆட்டோக்கள் மட்டுமே ஒரே வழி. ஆட்டோக்களில் அவசரத்திற்கு வந்து செல்ல ரூ.200 வரை கட்டணம் ஆகிறதுவசதி வேண்டி தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து  மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News