தீபாவளியா ஐய்யய்யோ ?
கங்கா ஸ்நாநம் ஆச்சா ? லோக்கல் டேப் தண்ணிதான்!தீபத்திருநாளில் நரகாசுரனை வதைத்து நியாயத்தை நிலை நிறுத்தியதால் அனைவரும் கொண்டாடுகிறோம். ஆனால் தீபாவளி நாள் தான் வருகிறது, என்று எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள். தெரியுமா ? கேஸ் டெலிவரி செய்பவர்கள், குறவன், முனிசிபல் கிளீனர்கள், வண்ணான் இப்படிப் பலர் நரகாசுரன் வடிவில் வந்து தீபாவளிக்கு காசு கேட்டால்,தீபாவளி யாருக்குத்தான் பிடிக்கும் ?ஏதோ போனஸ் வாங்கி புதுத் துணி எடுத்து பட்டாசு வாங்கி உறவினர்களுக்கெல்லாம் பலகாரம் கொடுத்து தீபாவளிக்காக பலகாரம் செய்து விட்டு, வேலை செய்பவர்களுக்கெல்லாம் பணம் கொடுத்து, ஆபர் சேல் கண்டு ஏமாந்து, இப்படிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் யாருக்குத்தான் தீபாவளி பிடிக்கும் ?வாங்கபவர்களுக்கோ, கொடுப்பவர்களுக்கோ தெரியலையே !
0
Leave a Reply