25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


மண் தரையால் நெல் மூடைகள் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு இன்றி  பாதிப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மண் தரையால் நெல் மூடைகள் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு இன்றி பாதிப்பு .

மாவட்டத்தில் செயல்படும் தற்காலிக அரசு நெல்கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 600 முதல் 800 மூடைகள் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் இவற்றிற்கு அருகிலேயே  தகுந்த சேமிப்பு கிடங்கு வசதியில்லை. மழைக் காலங்களில் நெல் மூடைகள் நனைந்து சேதம் அடைவதால் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். 

கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகள் தேக்கி வைக்கப்பட்டு லாரிகள் மூலம் தொலைவில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நெல் கொள்முதல் மூடைகள் கூலி பிரச்சினை, லாரி கிடைப்பதில் தாமதம், விடுமுறை என பல்வேறு காரணங்களால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே தேக்கி வைக்கப்படுகிறது.திறந்த வெளி மண் தரையாக உள்ளதால் மழை நேரங்களில் தார்ப்பாய் மூடி இருந்தும் தரையில் சிமெண்ட் தளம் இல்லாததால் தண்ணீர் தேங்கி அடியில் வைக்கப்படும் நெல் மூடைகள் சேதம் அடைகின்றன. தொடர் மழை காலங்களில் இது போன்ற சிக்கலை தீர்க்க தகுந்த சிமெண்ட், கான்கிரீட் தரைதளம் கொண்ட இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News