25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல் பத்தி மலை தோப்புகளில் யானைகள் புகுந்து சேதம் விவசாயிகள் பரிதவிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல் பத்தி மலை தோப்புகளில் யானைகள் புகுந்து சேதம் விவசாயிகள் பரிதவிப்பு.

 புல்பத்திமலை அருகே முகாமிட்டு அனுமன் கோயில் வரை தோப்புகளில் யானைகள்  புகுந்து பெரிய தென்னை மரங்களை சாய்த்தும் 60 க்கும் அதிகமான இளம் தென்னங் கன்றுகளின் குருத்துகளை பிடுங்கியும் உள்ளன. அத்துடன் வாழை, மா மரங்களையும், மின்வேலி, தண்ணீர் குழாய்களையும் உடைத்துள்ளது.அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல் பத்தி மலை அமைந்துள்ளது. இதன் அருகே நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா, வாழை, பலா உள்ளிட்ட சாகுபடி நடைபெறுகிறது.

ஓடை வழியாக நுழைந்து மின் வேலியையும் உடைத்து, ஆண்டு கணக்கில் பாதுகாத்து வளர்த்த மரங்களை, யானைகள் புகுந்து  ஒரே இரவில் சேதப்படுத்தியதால் ,பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மா மர சீசன் தொடங்க உள்ள நிலையில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News