25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையம் நகராட்சியில் பல லட்சம் செலவில் புதுப்பித்துள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சைமையத்தை செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் நகராட்சியில் பல லட்சம் செலவில் புதுப்பித்துள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சைமையத்தை செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

.ராஜபாளையம் நகராட்சி யில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 42 வார்டு களை கொண்ட நகராட்சி யில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த நடவடிக்கை இல்லாததால் இவற்றின் எண்ணிக்கை பெருகி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பராமரிப்பற்ற தெருநாய்களை கட்டுப்படுத்த கருத் தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரசு வழி காட்டுதல் இருந்து வரும்நிலையில் முறையான அமைப்பு இன்றி அறுவை அறுவை சிகிச்சை பணிகள் நடை பெறவில்லை.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் ராஜபாளையம் கருத் தடை அறுவை சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த கால்நடை மருத்துவ குழுவினர் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தினர். ஜன. மாதம் ராஜபாளையத்தில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பயணிகள் 39 பேரை தெரு நாய் கடித்த சம்பவமும், ஏப்.3ல் சத்திரப்பட்டி பகுதியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் 6 மாணவர்கள் உட்பட 64 பேரைவெறி நாய் கடித்தது உள்ளிட்ட நிகழ்ச்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையத்தில் ரூ.பல லட்சம் செலவில் புதுப்பித்தும் செயல்படாமல் உள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை கூடம்.2012ம் ஆண்டு கால் நடைத்துறை கெடுப்பின்படி கணக்கெடுப்பின்படி ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 611 தெரு நாய்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளாததால் நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

இதனால் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப் பட்ட ராஜபாளையம் நாய்கள் அறுவை மையத்தை கருத்தடை சிகிச்சை செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News