கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேரில் சென்று, அஜித்தை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் கார் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இங்கிலாந்தில் நடைபெறும் ‘மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை’ கார் பந்தயத்தில் அஜித்தும், அவரது அணியும் பங்கேற்கின்றனர்.
தமிழக முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10 முதல் 16-ம் தேதி வரை லண்டன் செல்ல உள்ளார். அப்போது தனது ஓய்வு நேரத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேரில் சென்று பார்க்கலாம் என்றும், அஜித்தை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0
Leave a Reply