ஆசிய கோப்பை: இந்தியா–வங்கதேசம் இன்று மோதல்.
மகளிருக்கான ஆசியக் கோப்பையின் 10-வது சீசன், ‘டி-20’ கிரிக்கெட் தொடராக துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடின.
‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. 3 போட்டிகளில் 6 புள்ளிகளைப் பெற்று, தனது பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
0
Leave a Reply