25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 15, 2025

சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  (15.04.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது.  ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.வாழ்க்கையில் சிறப்பாக வெற்றியை அடைந்தவர்கள் அல்லது தாங்கள் விரும்பக்கூடிய ஒன்றை சரியாக பெற்று பொருளாதாரத்தில், சமூகத்தில் நல்ல வலிமையோடு இருக்கக்கூடிய எல்லோருக்கும் முக்கியமான ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. அது விழிப்புணர்வும், அந்த விழிப்புணர்வை பெற்ற பிறகு அவர்கள்  தேடிய தேடல்கள் தான். எனவே, கல்வி, உழைப்பு, திறமை இந்த மூன்றும் முக்கியமானது தான். ஆனால் இது எல்லாவற்றையும் விட வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு தான் மிகவும் முக்கியம். நல்ல வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வுகள் பெற்றவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.மேலும், உயர்வு, தாழ்வு, வெற்றி என்பது இரண்டு நபர்களுக்கு இடையே கிடையாது. உங்களை நீங்களே ஒப்பிட்டு கொள்வதும், உயர்த்தி கொள்வதும் தான். அந்த  சிறந்த வாய்ப்புகளை பெறக்கூடிய மாணவிகளாக நீங்கள் உருவாக வேண்டும்.எனவே, சமுதாயத்தில் யார் வலிமையானவர்கள் என்றால், யாரிடம் பணம் இருக்கிறதோ, யாரிடம் பொருளாதாரம் இருக்கிறதோ அவர்கள் தான் வலிமையானவர்கள். இந்த காலகட்டத்தில் நிறைய வாய்ப்புகளை பெற்று பொருளாதாரத்தில் வலிமை பெற்றவர்களாக நீங்கள் உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Apr 15, 2025

காரிசேரி கிராமம் மின்சார வயர் பட்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கல்

விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி வட்டம்,  காரிசேரி கிராமம்,  வடக்குத் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் மறுபூஜைக்காக நேற்று 14.4.2025 மாலை சுமார் 3.10 மணியளவில் ரேடியோ அமைக்கும் பணியின்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரின் மீது மின்சார வயர் பட்டதில் ரேடியோ அமைக்கும் பணியை மேற்கொண்ட காரிசேரி கிராமத்தைச் சேர்ந்த திரு.திருப்பதி (வயத 27) த/பெ.ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும்,  மேற்படி சம்பவம் இறந்த திரு.திருப்பதி அவர்களின் வீட்டிற்கு அருகில் நிகழ்ந்ததால் அவருடைய மனைவி திருமதி.லலிதா (வயது 25) மற்றும் பாட்டி திருமதி.பாக்கியம் (வயது 75) ஆகியோர் திரு.திருப்பதி என்பவரை காப்பாற்ற முயன்றபோது மேற்படி இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.        மேலும்,  இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Apr 15, 2025

Coffee With Collector” என்ற 163-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில்  (15.04.2025)  CEOA     மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12-வது வகுப்பில் பயிலும் 200-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான Coffee With Collector”  என்ற 163- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 163-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Apr 15, 2025

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையாக நீதிமன்றத்தில் எதிரிகளுக்கு தண்டனைகள் கிடைக்கும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தூர் நகர் காவல் நிலைய சரகம் வெங்கடாசலபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வாதியான சீனிவாசன் மகன் குமரன்(56/2020) என்பவரின் வீட்டின் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த அயில்சாமி மகன் மாரிமுத்து(27/2025) எனிபவர் மாலை நேரங்களில் அவரது நண்பருடன் மது அருந்தி வந்தவரை வாதியும் அவரது தம்பி இறந்த நபரான சிவக்குமார்(50/2020) என்பவரும் கண்டித்ததற்கு 17.09.2020 அன்று இரவு 11.00 மணியாளவில் எதிரி மாரிமுத்து அருவாளுடன் வந்து சிவக்குமாரை தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 18.09.2020ம் தேதி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விருதுநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்வழக்கில் (15.04.2025) விருதுநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மேற்படி எதிரியை குற்றவாளி என அறிவித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000/- அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Apr 14, 2025

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்(14.04.2025) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில்   பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் (14.04.2025)  அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழா நிகழ்ச்சியில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல்  மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர்  1155 பயனாளிகளுக்கு ரூ.5.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.அதன்படி,ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறையின் மூலம் தையல் இயந்திரங்கள் 30 பயனாளிகளுக்கு ரூ.2.01 இலட்சம் மதிப்பிலும், தேய்ப்புப் பெட்டி 30 பயனாளிகளுக்கு ரூ.1.95 இலட்சம் மதிப்பிலும், பழங்குடியினர் நல வாரிய அட்டை 76 பயனாளிகளுக்கும், புதிரை வண்ணார் நல வாரிய அட்டை 10 பயனாளிகளுக்கும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் வாரிசுதாரருக்கு ஓய்வூதிய பட்டா   ரூ.30,000/- மதிப்பிலும்,  தீண்டாமை கடைபிடிக்காத 2 கிராமங்களுக்கான பரிசுத்தொகை  ரூ.20 இலட்சம் மதிப்பிலும்,தாட்கோ   மூலம் நன்னிலம்  மகளிர் நில உடமைத் திட்டத்தின் கீழ் (NWLPS) 6 பயனாளிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பிலும், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவுத் திட்டம் (CM - ARISE) மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.7 இலட்சம் மதிப்பிலும், பிரதம மந்திரி அனுஷித்ஜாதி அபியுதய் திட்டம் (CM - ARISE)   மூலம் 50 பயனாளிகளுக்கு  ரூ.25 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய  உறுப்பினர் அடையாள அட்டை 22 பயனாளிகளுக்கும்,சமூக நலத்துறையின் மூலம் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 204 பயனாளிகளுக்கு ரூ.51 இலட்சம் மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.40,760/-மதிப்பிலும், மாவட்ட முன்னோடி வங்கியின்  கடன் திட்டங்கள் மூலம்  30 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலும்,ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 20 பயனாளிகளுக்கு ரூ.70 இலட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும்,வருவாய்த்துறையின் மூலம் இணையவழிப்பட்டா 500 பயனாளிகளுக்கு ரூ.52.80 இலட்சம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் குடும்ப அட்டை 100 பயனாளிகளுக்கும்,கூட்டுறவுத்துறையின் கீழ், 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.23.50 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளையும்,மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.26 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும்,  அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு ரூ.26.14 இலட்சம்மதிப்பிலான கடனுதவிகளும்,வாழ்ந்து கட்டுவோம் திட்டத்தின்  கீழ்   55 பயனாளிகளுக்கு ரூ.34.95 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.09 இலட்சம் மதிப்பில்இணைப்புச் சக்கரம் இருசக்கர மோட்டார் வாகனங்களையும்  என மொத்தம் 1155 பயனாளிகளுக்கு ரூ.5.07 கோடி  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார் உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Apr 14, 2025

ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 300 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

 விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர்,  வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 300 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10.51 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், 15 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (13.04.2025) வழங்கினார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் இலட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், 143 பயனாளிகளுக்கு ரூ.5.05 கோடி மதிப்பிலும், இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் சீர்மரபினர் நல வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி ஆகியோர் முன்னிலையில்,157 பயனாளிகளுக்கு ரூ.5.50 கோடிமதிப்பிலும்,எனஆகமொத்தம்300பயனாளிகளுக்குமொத்தம்ரூ.10.51கோடிமதிப்பில்வீடுகட்டுவதற்கானவேலைஉத்தரவுகளைவருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, அரசின் திட்டங்களை  மக்களுக்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறது.டாக்டர் கலைஞர் அவர்கள் எதையெல்லாம் நினைத்தாரோ அதையெல்லாம் செய்கின்றவராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார். கடந்த 2000 ஆம் ஆண்டில் டாக்டர் கலைஞர் அவர்கள் முதன் முதலில் கிராமங்களில் நத்தம் புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு பட்டாக்களை வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் 2010 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வந்தார்.அவர் நினைவாக தற்போதைய நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்த திட்டத்தை கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில், மீதமுள்ள குடிசைகளையெல்லாம் தமிழ்நாட்டில் குடிசை இல்லாத வீடுகளாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்பொழுது தமிழ்நாட்டில் 1 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்டடும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் 2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அதன்படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீட்டில் குறைந்தபட்ச அடித்தளப் பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாகவும், அதில் 300 சதுர அடி கான்கிரீட் கூரையாலும், மீதமுள்ள 60 சதுர அடி கான்கிரீட் அல்லது பயனாளியின் விருப்பப்படி எரியாத பொருட்களால் செய்யப்பட்ட வேறு எந்த வகையான கூரையாகவும் வீடுகளை பயனாளியே விரும்பத்தக்க வகையில் கட்டும் வகையில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.ஆண்களை விட அதிகமாக வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் குடிசை வீடுகளே இல்லை என்ற நிலையை மாற்றி, அவர்களுக்கு சொந்த வீடு என்ற இலக்கோடு நமது  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகளை வழங்கி வருகிறார்.அதற்காக 2025-26 ஆம் ஆண்டு மட்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 1900 குடும்பங்களுக்கு ரூ.66.50 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான  வேலை உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. வேலை உத்தரவுகள் பெற்ற அனைவரும் விரைவில் வீடுகள் கட்டு, தங்களது சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனவும்,  இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசிற்கு என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி,  நகர்மன்றத் தலைவர்கள் திரு.ரவிக்கண்ணன்(திருவில்லிபுத்தூர்), திருமதி பவித்ரா ஷ்யாம்(இராஜபாளையம்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம் குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் திரு.கு.ஆறுமுகம், திரு.சிங்கராஜ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 13, 2025

விருதுநகர் மாவட்டம் ,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2025-க்கு தகுதியானவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தகவல்.சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும்  பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது1. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த (01.04.2024) 2024 ஏப்ரல் 1ந் தேதி அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது (31.03.2025) மார்;ச் 31-ந் தேதி 2025  அன்று 35 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.2. கடந்த நிதியாண்டில் (2024-2025) அதாவது 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்;தில் கொள்ளப்படும்.3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் ( சான்று இணைக்கப்பட வேண்டும்).4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும் அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.5. ஒன்றிய /மாநிலஅரசுகள், பொது துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள்/ பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.6. விண்ணப்பதாரருக்கு உள்ளுர் சமுதாய மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.7. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 03.04.2025 முதல் கடைசி நாள் 03.05.2025 அன்று மாலை 4.00 மணி ஆகும்.8. விண்ணப்பதாரர்கள் தங்கள் மாவட்ட காவல் நிலையத்தில் இருந்து அன்னார்களுக்கு உள்ள நன்னடத்தை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான  www.sdat.tn.gov.in உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இவ்விருதிற்கு 03.05.2025 மாலை 4.00 மணிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S.., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 13, 2025

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் ---

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 614 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.21.49 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் மூலம் 33 பயனாளிகளுக்கு ரூ.31.20 இலட்சம் மதிப்பில் வேலை உத்தரவுகளையும் என மொத்தம் 647 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.22.28 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் இன்று(12.04.2025) வழங்கினார்.ஆக மொத்தம் 647 பயனாளிகளுக்கு ரூ.22.28 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறைஅமைச்சர்திரு.தங்கம்தென்னரசு அவர்கள்  வழங்கி, தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய இந்த நான்கு ஆண்டு காலத்தில்.நாளுக்கு ஒரு திட்டம், அவையாகும் நன்மை பயக்கும் திட்டம், நாட்டு மக்களுக்கு உரித்தான திட்டம், ஏழை எளிய மக்களுக்கான திட்டம், சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான திட்டம், சமூகத்தில் அவர்களின் நிலையை உயர்த்துவதற்கான திட்டம் என்ற வகையில் பார்த்து பார்த்து இந்த அரசு செயல்பட்டு வருவதை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.வெற்றிகரமாக இன்று செயல்படுத்தி வரக்கூடிய திட்டன்களில்  கலைஞரின் கனவு இல்லம் திட்டமும் ஒன்று..1971 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர்தான் சென்னை மாநகரம் முழுவதும் இருக்கக்கூடிய குடிசைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி குடிசையில் குடியிருந்த அனைவரும் அடுக்குமாடிகளில் குடியேற வீடுகளை உருவாக்கி தந்தார்.தமிழ்நாட்டினுடைய தமிழ்க்குடிகள்; அனைவரும் அவர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான கான்கிரீட் வீடு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கி இருந்த திட்டத்தை செயல்படுத்தினார்.. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை ஏழை மக்களுக்கு எல்லாம் வீடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை நாம் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், 2025-26 ஆம் ஆண்டில் 1 இலட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..மழைக்காலத்திற்கு முன்பாக வீடுகளை கட்ட வேண்டும் என்பதற்காக பயனாளிகளை எல்லாம் தேர்வு செய்து, இன்றைக்கு ஒரு பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படுகிறது. நம்முடைய மாவட்டத்திலே அனைத்து மாவட்டங்களை விட அதிகமான அளவிற்கு வழங்கி இருக்கின்றோம்.தகுதியான பயனாளிகள் விடுபட்டிருந்தால், அவர்கள் அத்தனை பேருக்கும் நிச்சயமாக வீடு வழங்கும் திட்டத்தின் வீடுகள் வழங்கப்படும்.என தெரிவித்தார்.

Apr 13, 2025

விருதுநகர் மாவட்டம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 22.04.2025 அன்று நடைபெற உள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 22.04.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.      

Apr 13, 2025

விருதுநகர் மாவட்டம் ,நடப்பு ஆண்டு 20 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம் ,நடப்பு ஆண்டு 20 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது          விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் 20 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்திடவும்இ அவர்களின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் தமிழக அரசு பல்வேறு உழவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் பாசிப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த பாசிப்பயறு விளைபொருளை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் (Nயுகுநுனு)   மூலம்இ விலை ஆதரவு திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதன்மை கொள்முதல் நிலையங்களான சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாசிப்பயறு 10 மெ.டன் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாசிப்பயறு 10 மெ.டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பாசிப்பயறுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.86.82- என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியாயமான சராசரி தரத்தின்படி பாசிப்பயறு விளைபொருளில் அதிகபட்சமாக இதர பொருட்கள் கலப்பு 0.1 சதவீதமும்இ இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதமும்இ சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதமும் வண்டு தாக்கிய பருப்புகள் 2 சதவீதமும்இ ஈரப்பதம் 10 சதவீதமும் இருக்கலாம்.விவசாயிகள்; பாசிப்பயறு விளைபொருளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அசல் சிட்டாஇ கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல்இ வங்கி கணக்கு புத்தக நகல்இ ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இக்கொள்முதல் 15.03.2025 முதல் 12.06.2025 வரை நடைபெறும். விவசாயிகளுக்கு உரிய தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான விவரங்களை சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 04562 - 260410இ 90033-56172 என்ற எண்ணிற்கும்இ  அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை  04566 - 220225இ 79045-37699 என்ற  எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.மேலும்இ கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஃ தனிஅலுவலர் மற்றும் விருதுநகர் விற்பனைக்குழுஇ செயலாளர் ஆகியோர்களை அணுகி தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 112 113 114 115 116 117 118 ... 138 139

AD's



More News