25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 300 பயனாளிகளுக்கு  வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 300 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

 விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர்,  வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 300 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10.51 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், 15 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (13.04.2025) வழங்கினார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் இலட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், 143 பயனாளிகளுக்கு ரூ.5.05 கோடி மதிப்பிலும், இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் சீர்மரபினர் நல வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி ஆகியோர் முன்னிலையில்,157 பயனாளிகளுக்கு ரூ.5.50 கோடிமதிப்பிலும்,எனஆகமொத்தம்300பயனாளிகளுக்குமொத்தம்ரூ.10.51கோடிமதிப்பில்வீடுகட்டுவதற்கானவேலைஉத்தரவுகளைவருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, அரசின் திட்டங்களை  மக்களுக்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறது.டாக்டர் கலைஞர் அவர்கள் எதையெல்லாம் நினைத்தாரோ அதையெல்லாம் செய்கின்றவராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார். கடந்த 2000 ஆம் ஆண்டில் டாக்டர் கலைஞர் அவர்கள் முதன் முதலில் கிராமங்களில் நத்தம் புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு பட்டாக்களை வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் 2010 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வந்தார்.
அவர் நினைவாக தற்போதைய நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்த திட்டத்தை கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில், மீதமுள்ள குடிசைகளையெல்லாம் தமிழ்நாட்டில் குடிசை இல்லாத வீடுகளாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்பொழுது தமிழ்நாட்டில் 1 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்டடும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் 2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீட்டில் குறைந்தபட்ச அடித்தளப் பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாகவும், அதில் 300 சதுர அடி கான்கிரீட் கூரையாலும், மீதமுள்ள 60 சதுர அடி கான்கிரீட் அல்லது பயனாளியின் விருப்பப்படி எரியாத பொருட்களால் செய்யப்பட்ட வேறு எந்த வகையான கூரையாகவும் வீடுகளை பயனாளியே விரும்பத்தக்க வகையில் கட்டும் வகையில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஆண்களை விட அதிகமாக வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் குடிசை வீடுகளே இல்லை என்ற நிலையை மாற்றி, அவர்களுக்கு சொந்த வீடு என்ற இலக்கோடு நமது  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகளை வழங்கி வருகிறார்.அதற்காக 2025-26 ஆம் ஆண்டு மட்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 1900 குடும்பங்களுக்கு ரூ.66.50 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான  வேலை உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. வேலை உத்தரவுகள் பெற்ற அனைவரும் விரைவில் வீடுகள் கட்டு, தங்களது சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனவும்,  இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசிற்கு என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி,  நகர்மன்றத் தலைவர்கள் திரு.ரவிக்கண்ணன்(திருவில்லிபுத்தூர்), திருமதி பவித்ரா ஷ்யாம்(இராஜபாளையம்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம் குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் திரு.கு.ஆறுமுகம், திரு.சிங்கராஜ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News