25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


விருதுநகர் மாவட்டம் ,நடப்பு ஆண்டு 20 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் ,நடப்பு ஆண்டு 20 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம் ,நடப்பு ஆண்டு 20 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது     
     விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் 20 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்திடவும்இ அவர்களின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் தமிழக அரசு பல்வேறு உழவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பாசிப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த பாசிப்பயறு விளைபொருளை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் (Nயுகுநுனு)   மூலம்இ விலை ஆதரவு திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதன்மை கொள்முதல் நிலையங்களான சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாசிப்பயறு 10 மெ.டன் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாசிப்பயறு 10 மெ.டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பாசிப்பயறுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.86.82- என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியாயமான சராசரி தரத்தின்படி பாசிப்பயறு விளைபொருளில் அதிகபட்சமாக இதர பொருட்கள் கலப்பு 0.1 சதவீதமும்இ இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதமும்இ சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதமும் வண்டு தாக்கிய பருப்புகள் 2 சதவீதமும்இ ஈரப்பதம் 10 சதவீதமும் இருக்கலாம்.

விவசாயிகள்; பாசிப்பயறு விளைபொருளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அசல் சிட்டாஇ கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல்இ வங்கி கணக்கு புத்தக நகல்இ ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இக்கொள்முதல் 15.03.2025 முதல் 12.06.2025 வரை நடைபெறும்.
 
விவசாயிகளுக்கு உரிய தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான விவரங்களை சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 04562 - 260410இ 90033-56172 என்ற எண்ணிற்கும்இ  அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை  04566 - 220225இ 79045-37699 என்ற  எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும்இ கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஃ தனிஅலுவலர் மற்றும் விருதுநகர் விற்பனைக்குழுஇ செயலாளர் ஆகியோர்களை அணுகி தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News