25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையாக நீதிமன்றத்தில் எதிரிகளுக்கு தண்டனைகள் கிடைக்கும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் சாத்தூர் நகர் காவல் நிலைய சரகம் வெங்கடாசலபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வாதியான சீனிவாசன் மகன் குமரன்(56/2020) என்பவரின் வீட்டின் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த அயில்சாமி மகன் மாரிமுத்து(27/2025) எனிபவர் மாலை நேரங்களில் அவரது நண்பருடன் மது அருந்தி வந்தவரை வாதியும் அவரது தம்பி இறந்த நபரான சிவக்குமார்(50/2020) என்பவரும் கண்டித்ததற்கு 17.09.2020 அன்று இரவு 11.00 மணியாளவில் எதிரி மாரிமுத்து அருவாளுடன் வந்து சிவக்குமாரை தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 18.09.2020ம் தேதி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விருதுநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கில் (15.04.2025) விருதுநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மேற்படி எதிரியை குற்றவாளி என அறிவித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000/- அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News