25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 06, 2025

விருதுநகர் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான 5 புதிய நூல்களை காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (05.05.2025) அன்று மாவட்ட  நிர்வாகத்தின்  சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,  விருதுநகர் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான 5 புதிய நூல்களை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்டார்.பின்னர், நூல்கள் எழுதிய பேராசிரியர்களுக்கு  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.மாவட்ட நிர்வாகத்தின் சிறந்த முன்னெடுப்பாக தான் கரிசல் இலக்கியத்திற்கென்று ஒரு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு விழாக்கள் நடத்தினாலும், நமது மண் சார்ந்த விழாக்கள் நடத்துவதற்காக எப்படி தமிழ் இலக்கிய வரலாற்றில் கரிசல் இலக்கியத்திற்கென்று பங்களிப்பு, இடம் இருக்கின்றதோ அதை வெளிக்கொணரக் கூடிய வகையில் அது குறித்த ஒரு அருமையான அருங்காட்சியகம் உருவாக்கி அந்த களத்தில் பணியாற்றக்கூடிய தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எழுத்தாளர்களை ஒரு சேர குவித்து அங்கு கரிசல் இலக்கிய திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.தொடர்ச்சியான அலுவல் சார்ந்து இருக்கக்கூடிய கடமைகளில் இது ஒரு முக்கியமான கடமையாக கருதி, இந்த நூல்களை பேராசிரியர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.கீழடி அருங்காட்சியத்திற்கு இணையாக நம்முடைய விருதுநகர் அருங்காட்சியம் உருவாக்குகிறோம். நம்முடைய மரபுகளை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியம். குடவரைக் கோவில்கள் என்றால் அது பல்லவர் காலத்;தில் இருக்கக்கூடியது என்று தான் கூறுவோம். சோழ நாட்டில் இல்லாத பெருமை நம்முடைய நாட்டில் இருக்கிறது என்றால் அது வட்டனத்தி கல்வெட்டு.இந்த கல்வெட்டு நம்முடைய பாண்டிய நாட்டுக்கென்று உருவாக்கப்பட்டது.  அந்த காலத்தில் மாந்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள். எப்படி சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதை வாழ்வியல் நெறிமுறைகளையும் விளக்குவதாக இந்த கல்வெட்டுகள் அமைந்திருக்கிறது.எக்காலத்திற்கும் ஏற்ற மொழியாக இருப்பது நமது தமிழ் மொழிதான். தமிழ் மொழியின் சிறப்புகளை அறிஞர்கள் புத்தக வடிவில் தந்து இருக்கிறார்கள்.புதிய நூல்களை இயற்றக்கூடிய அதே நேரத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருடைய கூட்டு உழைப்பில் உருவாக்கப்பட்ட நூல்கள் எல்லாம் குளத்தில் இட்ட விளக்காக இருக்கின்றதே தவிர, அதை குன்றிலிட்ட விளக்கமாக மாற வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் இப்படி ஒரு முன்னெடுப்பை செய்ய வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இடத்தில் ஆலோசனைகள் கேட்டபோது, அமைச்சர் அவர்கள் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற ஒரு தனி ஆய்வு அமைப்பில் புரவலராக இருந்து தொடர்ச்சியாக நமது பகுதிகளில் இதுவரை வெளிவராத கல்வெட்டுக்கள், வரலாற்று ஆய்வுகள் எல்லாம் அவருடைய முயற்சியால் பல ஆய்வு கட்டுரைகள், பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இன்று வெளியிட்டுள்ள இந்த 5 புதிய நூல்களும் நிச்சயமாக அதனுடைய தொடர்ச்சியாக இருக்கும்.நமது மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 நூல்களும் தற்போது இந்த புதிய 5 நூல்களும் என மொத்தம் 20 நூல்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, வே.வ.வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி முன்னாள் வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் திருமதி சி.மனோராஞ்சிதமணி அவர்கள் எழுதிய “தென்தமிழ் நாட்டின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள்- ஒரு கண்ணோட்டம்“ என்ற நூலும்,அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி முதுநிலை வராலாற்றுத்துறை பேராசிரியை (சுயநிதி) முனைவர் திருமதி எல்.மகேஸ்வரி அவர்கள் எழுதிய விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் (கிபி 6-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை)’-ஓர் ஆய்வு” என்ற நூலும்,இராஜபாளையம்  இராஜுக்கள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்(சுயநிதி) முனைவர் திரு.மு.பிரசன்னா அவர்கள் எழுதிய ‘திருக்குறள் என்றைக்குமான இலக்கியம்’ என்ற நூலும்,சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை பேராசிரியர்  முனைவர் ந.அருள்மொழி அவர்கள் எழுதிய "சங்க இலக்கியமும் இளையோரும் மற்றும் மக்கள் இலக்கியம் -சிலப்பதிகாரம்" என்ற நூலும்,சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.ஜீவப்பிரியா அவர்கள் எழுதிய “100 ஆண்டுகளின் வணிக ஆளுமைகள்- விருதுநகர் மாவட்டம்" என்ற நூலும் என விருதுநகர் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான 5 புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த 5 நூல்களை உருவாக்கிய அனைத்து பேராசிரியர் பெருமக்களுக்கும், இதற்கு பின்புறமாக இருந்து உழைத்த வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சுற்றுலாத்துறை உள்ளிட்ட  அனைத்துத்துறை அலுவலர்களுக்கும், இதைவிட மிக முக்கியமாக இது போன்ற நூல்களை தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் கொண்டு வருவதற்கு அதற்கு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கக்கூடிய நமது மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் தங்களின் நூல்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் திருமதி உமாதேவி,   விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 06, 2025

திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளைம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் பயன்கள் தொடர்புடைய பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (06.05.2025) நேரில் சென்று  பார்வையிட்டு, பயனடைந்து வரும் பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கொத்தங்குளம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொருக்கம்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.தென்கரை ஊராட்சியில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் ரூ.16.75 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும்,பின்னர், இளந்திரை கொணடான் ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் சீரமைக்கப்பட்டு உள்ள பணிகளையும்,மேலூர் துரைசாமிபுரம் ஊராட்சியில் கனிம வள நிதியின்  கீழ் ரூ.8.11 இலட்சம் மதிப்பில் மயான காத்திருப்புக்கூடம் மற்றும் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் பல்வேறு திட்டங்கள், பயன்கள் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

May 05, 2025

சாத்தூர் துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில், புதிய சாத்தூர் கோட்ட அலுவலகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள்  திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம்,  சாத்தூர் துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில்  (05.05.2025) தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில்,  புதிய சாத்தூர் கோட்ட அலுவலகத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற  உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வசிக்க கூடிய பொதுமக்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய வகையில், மின்சாரத்துறையின் நிர்வாக கட்டமைப்புகளை மேம்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான, தங்கு தடையின்றி மின்சார சேவைகளை வழங்கும் விதமாக எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். நமது விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில்,  புதிய சாத்தூர் மின் பகிர்மான கோட்டம் உருவாக்கப்படும் என சட்டமன்ற மானிய கோரிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  அறிவித்திருந்தார்கள்.அதன்படி,  05.05.2025  முதல் சாத்தூர் துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில் புதிய சாத்தூர் கோட்ட அலுவலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.மேலும், புதியதாக உதயமாகியுள்ள இக்கோட்டத்தின் கீழ் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட பிரிவு அலுவலகங்கள், N.சுப்பையாபுரம், உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட N.சுப்பையாபுரம் மற்றும் ஏழாயிரம்பண்ணை ஆகிய பிரிவு அலுவலங்கள், ஆலங்குளம் உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட ஆலங்குளம், கீழராஜகுலராமன், கல்லமநாயக்கன்பட்டி ஆகிய பிரிவு அலுவலங்கள், ஊரகம்/சிவகாசி உபகோட்டத்திற்குட்பட்ட வெம்பக்கோட்டை பிரிவு அலுவலகம் மற்றும் துணை மின் நிலையம்/இராஜபாளையம் உபகோட்டத்திற்குட்பட்ட ஆசிலாபுரம் பிரிவு அலுவலகம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.எனவே, மேற்படி பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் தொடர்பான செயற்பொறியாளர் அலுவலக பணிகளுக்கு புதிய சாத்தூர் கோட்ட அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, மேற்பார்வை பொறியாளர்(தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், விருதுநகர் வட்டம்) திருமதி.ப.லதா,   தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியாளர்கள் திரு.எஸ்.முத்துராஜ்(ராஜபாளையம் கோட்டம்), திருமதி.பா.பத்மா(சிவகாசி கோட்டம்), திரு.அ.ஷாஜகான்(சாத்தூர் கோட்டம்) ,சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார்,  தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 04, 2025

விருதுநகர் மாவட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிவரும் வரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திட்டத்தின் பயன் குறித்து கருத்துக்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகள் பெற்று வீடுகள் கட்டி வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.தமிழ்நாடு அரசு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.கலைஞர் கனவு இல்லம் திட்டம் மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.தமிழ்நாடு அரசு  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 172 பயனாளிகளுக்கும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 278 பயனாளிகளுக்கும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 220 பயனாளிகளுக்கும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 159 பயனாளிகளுக்கும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 127 பயனாளிகளுக்கும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 217 பயனாளிகளுக்கும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 95 பயனாளிகளுக்கும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 116 பயனாளிகளுக்கும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 201 பயனாளிகளுக்கும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 267 பயனாளிகளுக்கும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 48 பயனாளிகளுக்கும் என மொத்தம் 1900 பயனாளிகளுக்கு பணி நியமன அணைகள் வழங்கப்பட்டு வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 360 சதுர அடி பரப்பளவில் காங்கிரீட் வீடுகள் கட்டப்படுவதற்கு ஏறத்தாழ ரூ.3.50 இலட்சம் வழங்கப்படுகிறது.அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம்,  சூரனூர் ஊராட்சி தேனூர் கிராமத்தில்கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் தலா ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்து, தங்களுக்கான வீடுகள் கட்டி வரும் பயனாளிகளிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து  கருத்துக்களை கேட்டறிந்தார்.

May 04, 2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (04.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பேர்நாயக்கம்பட்டி ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர், புலிப்பாறைப்;பட்டி ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்;,மேலும், திருவேங்கடப்புரம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பில்; கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,நதிக்குடி ஊராட்சியில், ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.              இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை   மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.           

May 04, 2025

விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு தொகுதி-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IV  12.07.2025  அன்று  நடைபெறவிருக்கிறது. இத்தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு தொகுதி-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 07.05.2025 முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில்  நடைபெறவிருக்கிறது.இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், இந்த பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள்   மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரடியாகவோ (அ) 04562-293613 என்ற தொலைபேசி எண் (அ) studycirclevnr@gmail.com என்ற மெயில் வாயிலாக தொடர்புகொள்ளலாம்.  எனவே TNPSC குரூப்  4  தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 02, 2025

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்திலுள்ள T.புனவாசல் கண்மாய்க்கு பாசன வசதி அளிக்கும் வகையில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கீழ்செம்பூர் கிராமத்தில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே  இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்திலுள்ள T.  புனவாசல் கண்மாய்க்கு பாசன வசதி அளிக்கும் வகையில், ரூ.9.27 கோடி மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டு  வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். கிருதுமால் நதியின் குறுக்கே அமைந்துள்ள கீழப்பருத்தியூர் அணைக்கட்டு மற்றும் கல்லிக்குளம் அணைக்கட்டுக்கு இடையில் விவசாய பெருங்குடி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே மண்கரை அமைத்து வு.புனவாசல் கண்மாய்க்கு பாசன நீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த நிலையில் அணைக்கட்டு கட்டுமானம் அமைத்து நிரந்தரமாக எவ்வித தடங்கலின்றி  T.  புனவாசல் கண்மாய்க்கு பாசன நீர் எடுத்துச் செல்ல விவசாய பெருங்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில் பாசன திட்டங்களின் கீழ் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களால் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.9.27 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் அவர்களால் 29.01.2025 இன்று கீழ்செம்பூர் அணைக்கட்டு கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு, தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.மேலும், குண்டாற்றின் உப நதியான கிருதுமால் நதியானது துவரிமான் கண்மாய் பாசன நிலங்களின் மழைநீர் வடிகாலாக ஆரம்பித்து வழியிலுள்ள மாடக்குளம் போன்ற கண்மாய்களின் உபரி நீரோடு மழை நீரையும் சேர்த்து மதுரை மாநகரப் பகுதிகள் வழியாக ஊடுருவி சென்று சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் வழியாக சென்று குண்டாற்றில் கலக்கிறது.பின்னர், வைகையாற்றின் குறுக்கே அமைந்துள்ள விரகனூர் மதகு அணையின் மேற்புறம் அமைந்துள்ள வெள்ளநீர் போக்கியின் தலைமதகின் வழியே, வெள்ளக்கால்வாய் மூலம் வைகை ஆற்றின் வெள்ள நீர் கிருதுமால் ஆற்றில் பெறப்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் 18 கண்மாய்களும், விருதுநகர் மாவட்டத்தில் 50 கண்மாய்களும், மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 7 கண்மாய்களும் மொத்தம் 75 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு அதன் மூலம் 18,775 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகிறது.இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம்  T.  புனவாசல் கிராமம், கீழப்பருத்தியூர் கிராமம், கீழ்செம்பூர் கிராமம், மேல்செம்பூர் கிராமம் மற்றும் வீரசோழன் கிராமம் ஆகிய 5 கிராமங்களின் மூலம் 237.39 ஹெக்டேர் (586.35 ஏக்கர்) பாசன பரப்பு பயன்பெறுவதுடன். நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்து கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறு நிரம்பி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் பிரச்சனை தீர்வதுடன் இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, காரியாபட்டி உதவி செயற்பொறியாளர்கள் (நீ.வ.து) திரு. கி.முத்துசாமி, திரு.மு.அழகு சுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 02, 2025

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெறும் தமிழ் வார விழாவில் இளைஞர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில்  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்தார்.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, 10.05.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர்களுக்கானதமிழ் மொழி இலக்கிய மாநில அளவிலான வினாடி வினாப் போட்டி நடைபெறவுள்ளது.இந்த மாநில அளவிலான வினாடி வினாப் போட்டியில் குழுவாக அதிகபட்சம் மூன்று நபர்கள் பங்கு பெறலாம். பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000- இரண்டாம் பரிசாக ரூ.10,000- மூன்றாம் பரிசாக ரூ.7000- வழங்கப்படும்.இப்போட்டிகளில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 96988-10699 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 02, 2025

"Coffee With Collector” என்ற 173-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (02.05.2025) சிவகாசி ஜே.சீ.மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 30-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 173- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ ஃ மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு,  173-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது  தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள்கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

May 02, 2025

இலவச காமிக் புத்தக தினம் (FCBD) முன்னிட்டு 03.05.2025 மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இலவச காமிக் புத்தக தினம் (FCBD)  ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் சனிக்கிழமை உலகெங்கிலும்  கொண்டாடப்படுகிறது. புதிய வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக குழந்தைகளின் டிஜிட்டல் திரை நேரத்தை  குறைத்து புத்தகங்கள் வாசிப்பை அதிகரிக்கும் வகையில் புதிய முன்னெடுப்பாக விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக காமிக்ஸ் நூலகம் புதிதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் வருகின்ற மே 3 ஆம் தேதி இலவச காமிக் புத்தக தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கான  திருக்குறள்கள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி இராஜபாளையம் காமிக் நூலகம் மற்றும் சிவகாசி அறிவுசார் மையம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு30 திருக்குறள்களை ஒப்புவிக்கும் 7 முதல் 10 வரை உள்ள மாணவர்களுக்கும், 50 திருக்குறள்களை ஒப்புவிக்கும் 11 முதல் 14  வயது உள்ள மாணவர்களுக்கும் காமிக்ஸ் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.இந்நிகழ்வில் கலந்து கொள்ள  86082- 04154என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். எனவே இந்த இலவச காமிக் புத்தக தினம் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 114 115 116 117 118 119 120 ... 140 141

AD's



More News