அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்(14.04.2025) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் (14.04.2025) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழா நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர் 1155 பயனாளிகளுக்கு ரூ.5.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அதன்படி,ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறையின் மூலம் தையல் இயந்திரங்கள் 30 பயனாளிகளுக்கு ரூ.2.01 இலட்சம் மதிப்பிலும், தேய்ப்புப் பெட்டி 30 பயனாளிகளுக்கு ரூ.1.95 இலட்சம் மதிப்பிலும், பழங்குடியினர் நல வாரிய அட்டை 76 பயனாளிகளுக்கும், புதிரை வண்ணார் நல வாரிய அட்டை 10 பயனாளிகளுக்கும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் வாரிசுதாரருக்கு ஓய்வூதிய பட்டா ரூ.30,000/- மதிப்பிலும், தீண்டாமை கடைபிடிக்காத 2 கிராமங்களுக்கான பரிசுத்தொகை ரூ.20 இலட்சம் மதிப்பிலும்,தாட்கோ மூலம் நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டத்தின் கீழ் (NWLPS) 6 பயனாளிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பிலும், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவுத் திட்டம் (CM - ARISE) மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.7 இலட்சம் மதிப்பிலும், பிரதம மந்திரி அனுஷித்ஜாதி அபியுதய் திட்டம் (CM - ARISE) மூலம் 50 பயனாளிகளுக்கு ரூ.25 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை 22 பயனாளிகளுக்கும்,
சமூக நலத்துறையின் மூலம் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 204 பயனாளிகளுக்கு ரூ.51 இலட்சம் மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.40,760/-மதிப்பிலும், மாவட்ட முன்னோடி வங்கியின் கடன் திட்டங்கள் மூலம் 30 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலும்,ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 20 பயனாளிகளுக்கு ரூ.70 இலட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும்,
வருவாய்த்துறையின் மூலம் இணையவழிப்பட்டா 500 பயனாளிகளுக்கு ரூ.52.80 இலட்சம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் குடும்ப அட்டை 100 பயனாளிகளுக்கும்,கூட்டுறவுத்துறையின் கீழ், 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.23.50 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளையும்,மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.26 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு ரூ.26.14 இலட்சம்மதிப்பிலான கடனுதவிகளும்,வாழ்ந்து கட்டுவோம் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு ரூ.34.95 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.09 இலட்சம் மதிப்பில்இணைப்புச் சக்கரம் இருசக்கர மோட்டார் வாகனங்களையும் என மொத்தம் 1155 பயனாளிகளுக்கு ரூ.5.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார் உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply