விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் ---
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 614 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.21.49 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் மூலம் 33 பயனாளிகளுக்கு ரூ.31.20 இலட்சம் மதிப்பில் வேலை உத்தரவுகளையும் என மொத்தம் 647 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.22.28 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் இன்று(12.04.2025) வழங்கினார்.
ஆக மொத்தம் 647 பயனாளிகளுக்கு ரூ.22.28 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறைஅமைச்சர்திரு.தங்கம்தென்னரசு அவர்கள் வழங்கி, தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய இந்த நான்கு ஆண்டு காலத்தில்.நாளுக்கு ஒரு திட்டம், அவையாகும் நன்மை பயக்கும் திட்டம், நாட்டு மக்களுக்கு உரித்தான திட்டம், ஏழை எளிய மக்களுக்கான திட்டம், சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான திட்டம், சமூகத்தில் அவர்களின் நிலையை உயர்த்துவதற்கான திட்டம் என்ற வகையில் பார்த்து பார்த்து இந்த அரசு செயல்பட்டு வருவதை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.வெற்றிகரமாக இன்று செயல்படுத்தி வரக்கூடிய திட்டன்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டமும் ஒன்று..
1971 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர்தான் சென்னை மாநகரம் முழுவதும் இருக்கக்கூடிய குடிசைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி குடிசையில் குடியிருந்த அனைவரும் அடுக்குமாடிகளில் குடியேற வீடுகளை உருவாக்கி தந்தார்.தமிழ்நாட்டினுடைய தமிழ்க்குடிகள்; அனைவரும் அவர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான கான்கிரீட் வீடு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கி இருந்த திட்டத்தை செயல்படுத்தினார்.
. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை ஏழை மக்களுக்கு எல்லாம் வீடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை நாம் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், 2025-26 ஆம் ஆண்டில் 1 இலட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
.மழைக்காலத்திற்கு முன்பாக வீடுகளை கட்ட வேண்டும் என்பதற்காக பயனாளிகளை எல்லாம் தேர்வு செய்து, இன்றைக்கு ஒரு பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படுகிறது. நம்முடைய மாவட்டத்திலே அனைத்து மாவட்டங்களை விட அதிகமான அளவிற்கு வழங்கி இருக்கின்றோம்.தகுதியான பயனாளிகள் விடுபட்டிருந்தால், அவர்கள் அத்தனை பேருக்கும் நிச்சயமாக வீடு வழங்கும் திட்டத்தின் வீடுகள் வழங்கப்படும்.
என தெரிவித்தார்.
0
Leave a Reply