25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி இணையதளத்தில் பதிவு செய்திட 15.04.2025 அன்று வரை கால நீட்டிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி இணையதளத்தில் பதிவு செய்திட 15.04.2025 அன்று வரை கால நீட்டிப்பு

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ்; வேலைவாய்ப்பு பயிற்சி (PM INTERNSHIP)  வழங்கும் திட்டத்தின்வாயிலான நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 14889 நபர்களுக்கு முன்னனி தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்வதற்கு தேவையான கல்வி தகுதியுடைய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக பயிற்சி அளிக்கும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.  இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24வயதிற்குள் இருக்கவேண்டும். பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5000- வீதம் வழங்கப்படும்.

மேலும் பயிற்சிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மானியமாக ரூ.6000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவர்கள் கல்விச்சான்றிதழ்கள், ஆதார்அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறாhர்கள். மேலும் ஏற்கனவே தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றிருக்க கூடாது. மேலும் முழுநேர பணிசெய்பவராகவோ, முழுநேரக் கல்வி கற்பவராக இருக்ககூடாது.  
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கவேண்டிய தேதி 15.04.2025 அன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்; (04562 -294755) என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் இணையம் மூலம் விண்ணப்பிக்க https://pminternship.mcg.gov.in/ என்ற வலைதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News