25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 20, 2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு,  பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம் அளிக்கப்படவுள்ளது .

தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு,  ட்ரோன்தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பபயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி(Embedded Sensor Testing Program),  பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்(Core Tech Placement program ) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். ட்ரோன் தயாரிப்பு கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி(Embedded Sensor Testing Program),  பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம் (PCB Designing Program) மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program) போன்றபயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் (Diploma) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். மேற்கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்தெரிவித்துள்ளார்.

Sep 19, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாம் .

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (18.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களைத் தேடி அரசு அதிகாரிகள் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்களுக்கு உரிய தீர்வை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் 15.07.2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.  இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சிறப்பு முகாம்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 45,766 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 23,039 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 3644 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 19,083 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மேலும், இம்முகாம்களை  அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். பின்னர், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும்.எனவே, இம்முகாமினை அனைத்து பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

Sep 19, 2025

சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்  மாவட்ட அளவிலான  பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் .

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்  மாவட்ட அளவிலான  பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.                        இதன் ஒரு கட்டமாக வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதுவரை ஒரு வாக்குச் சாவடியில் 1500 வாக்காளர்கள் வரை இருக்கலாம் என்ற வரம்பினை தற்போது குறைத்து, எந்தவொரு வாக்குச் சாவடியிலும் 1200 வாக்காளர்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரும் அச்சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அதற்கான பரிந்துரைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளனர்.                        இதன் அடிப்படையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்  மாவட்ட அளவிலான  பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மேலும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சிஃநகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 1901 வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில் தற்போது மறுசீரமைப்பு செய்ய உத்தேசித்துள்ள அடிப்படையில்; கூடுதலாக 98 வாக்குச்சாவடிகள் உருவாக்கம் செய்ய பரிந்துரைகள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.                        போதிய அவகாசம் அளித்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர், எந்தவொரு தகுதியான வாக்காளரும் விடுபடாமலும், தகுதியற்ற ஒருவரது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வகையிலும் இப்பணிகள் நடைபெறும் என்று தெரிவித்ததுடன், வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை துரிதமாகவும், சரியான முறையிலும் மேற்கொள்வதற்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைக் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

Sep 19, 2025

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்,105 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.05 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில்,  (18.09.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  சாத்தூர்   வட்டாரத்தில் ஊரக மற்றும் நகர்ப்புர பகுதிகளில் உள்ள 105  மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 871 உறுப்பினர்களுக்கு ரூ.6.05 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார். அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்,சுய உதவிக்குழு வங்கிகடன் சார்ந்த, 51 குழுக்களுக்கு ரூ.511 இலட்சம் மதிப்பிலும்,  அமுதசுரபி நிதி சார்ந்த, 15 குழுக்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலும், வட்டார வணிக வள மைய கடன் சார்ந்த, 25 குழுக்களுக்கு ரூ.12.50 இலட்சம் மதிப்பிலும், வாழ்வாதார நிதி கடன் சார்ந்த, 3  குழுக்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பிலும், சுய உதவிக்குழு வங்கிக் கடன் சார்ந்த, 10 குழுக்களுக்கு ரூ.66.10  இலட்சம் மதிப்பிலும், பகுதி அளவிலான கூட்டமைப்பு சார்ந்த, 1 குழுவிற்கு ரூ.2.40 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 105  மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 871 மகளிர்களுக்கு ரூ.6.05 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.ஒரு காலகட்டத்தில் பெண்கள் வெளியில் வரமுடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. இன்றைய காலகட்டத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தான், ஆண்களுக்கு சமமாக சுய உதவிக் குழு உதவியுடன் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாகரீகம் ஏற்பட மாற்றங்களும் ஏற்படும். பெண்கள் வெளியில் வந்து தங்களின் மரியாதை பிறப்பதற்கு காரணமாக இருந்தது திராவிட மாடல் தான். பெண்கள் வெளியில் வந்து முன்னேற வேண்டும். ஆணுக்கு பெண் சலித்தவள் அல்ல என்றும், ஆணும், பெண்ணும் சமம் என்றும், பெரியாரைத் தொடர்ந்து, அண்ணாவைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரைத் தொடர்ந்து கூறியவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இந்த மகளிர் சுய உதவி குழு செயல்படுத்தப்படுகிறது. சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ, தனிப்பட்ட முறையிலோ கடன் உதவி பெறும் போது அதனை திருப்பி செலுத்துவதில் பெண்கள் நியாயமாக உள்ளார்கள்.எவ்வித அடமானம் இல்லாமல் ரூ.50 இலட்சம் வரை கடன் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு அரசு பெண்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கடனுக்கான பணத்தை கட்டும் போது, அடுத்த தடவை அதிகப்படியான கடன் உதவி தரப்படுகிறது. இதன்மூலம்  பெண்கள் தொழில் செய்யலாம். சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கலாம். அதனை உருவாக்கித்தந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதனை மென்மேலும் மேம்படுத்தி வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஈட்டிய வருமானத்தில் வேறு யாரையும் எதிர்பாராமல் மகளிர் அனைவரும் சுயமாக தொழில் புரிய வேண்டும். உங்களால் முடியும் என்று நினைத்து அதனை நிச்சயமாக முடித்து காட்ட வேண்டும். பெண்களுக்கு இல்லாத சக்தி யாருக்கும் இல்லை. சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்கள்.நல்ல முதலமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என  அமைச்சர்அவர்கள் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்டத்தில் 14,083 உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் 1 இலட்சத்து 67 ஆயிரம் மகளிர் உள்ளனர். இதில்,2024-2025ல் 982 குழுவினர் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-2026 ல் 662 புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு குழுக்களைச் சேர்ந்த 10,700 உறுப்பினர்களுக்கு 2024-2025 ஆண்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.2025-2026 ல் 4,107 குழுவினருக்கு 432 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.அடுத்தகட்டமாக கடந்த வாரம் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் சுய உதவிக்குழு கடனுதவி  சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்று அருப்புக்கோட்டை வட்டாரத்தில் சுமார் ரூ.9 கோடி கடன் உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது, சாத்தூரில் 105 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 871 உறுப்பினர்களுக்கு ரூ.6.05 கோடி கடனுதவி வழங்கப்படவுள்ளது.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சாத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.குருசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி நிர்மலா கடற்கரை ராஜ்,  உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 19, 2025

சாத்தூர் வட்டம் பந்துவார்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இ-பட்டாவினை உரிய 12 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் பந்துவார்பட்டியில்  (18.09.2025) ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இ-பட்டாவினை உரிய 12 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.

Sep 19, 2025

அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 191 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வேல்ராஜன் மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் (18.09.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் உள்ள 191 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.அதன்படி, அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 94 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.845.55 இலட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளையும், 51 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.53.5 இலட்சம் மதிப்பிலான சமூக முதலீட்டு நிதிகளையும், 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 இலட்சம் மதிப்பிலான வாழ்வாதார நிதி கடனுதவிகளையும், 40 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பிலான வட்டார வணிக வள மைய கடனுதவிகளையும், 2 பகுதி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பிற்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் என மொத்தம் 191  மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1304 மகளிர்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தினை தொடங்கி வைத்தார். தற்பொழுது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இந்த மகளிர் சுய உதவி குழு செயல்படுத்தப்படுகிறது.ஒரு காலத்தில் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு செல்வது குறைவாகவே இருந்தது. ஆனால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வந்த பிறகு தான் நம்முடைய சகோதரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதும் அவர்களுக்கான குறைகளை அளிப்பதும், தேவைகளை கேட்பதும் அதிகமாகியுள்ளது.அதேபோன்று அரசின் பல திட்டங்களை செயல்படுத்துவதில் அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக்குழு பெண்களும் ஈடுபடுகிறார்கள்.சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ, தனிப்பட்ட முறையிலோ கடன் உதவி பெறும் போது அதனை திருப்பி செலுத்துவதில் பெண்கள் நியாயமாக உள்ளார்கள்.எவ்வித அடமானம் இல்லாமல் ரூ.50 இலட்சம் வரை கடன் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு அரசு பெண்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கடனுக்கான பணத்தை கட்டும் போது, அடுத்த தடவை அதிகப்படியான கடன் உதவி தரப்படுகிறது. இதன்மூலம்  பெண்கள் தொழில் செய்யலாம். சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கலாம். அதனை உருவாக்கித்தந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதனை மென்மேலும் மேம்படுத்தி வருபவர்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.அதுபோல, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பள்ளிக் குழந்தைகள் பசியோடு வரக்கூடாது என்பதற்காக காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்  திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.தற்போது, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், மக்களைத் தேடி அரசு அதிகாரிகள் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்களுக்கு உரிய தீர்வை வழங்கும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.பெண்களின் உரிமைக்காகவும், மேம்பாட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்   திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  தெரிவித்தார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.3500 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள  992  மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 10,996 மகளிர்களுக்கு ரூ.95.69 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.அந்த வகையில், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் 191 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான கடனுதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணத்திட்டம் உள்ளிட்ட பெண்களுக்கான பல்வேறு திட்டங்களோடு இன்றைய நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு கடன் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அரசு திட்டங்களை எல்லாம் நன்கு பயன்படுத்தி கொண்டு, பெண்கள் பொருளாதாரத்தில் வலிமை பெற்றவர்களாக திகழ வேண்டுமென தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 19, 2025

“நலம் காக்கும் ஸ்டாலின்”  திட்டத்தின் கீழ்  எதிர்வரும்  20.09.2025  அன்று திருச்சுழி  வட்டாரம், முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் , பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற உள்ளது.

 தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 20 செப்டம்பர் 2025  அன்று  திருச்சுழி வட்டாரம், முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளன.                மேலும் இம்முகாமில் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சன்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஆகவே பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு இச்சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , I A S . அவர்கள் தெரிவித்தார்.

Sep 18, 2025

முஸ்லீம் நடுநிலைப்பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக உயர்நிலை வகுப்புகளுக்கு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு  அனுமதி ஆணைகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தார்கள்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகராட்சி பாவாலி சாலையில் உள்ள முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் (17.09.2025) பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர் முஸ்லீம் நடுநிலைப்பள்ளியை  அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக உயர்நிலை வகுப்புகளுக்கு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு  அனுமதி ஆணைகளை  வழங்கி துவக்கி வைத்தார்கள்.  மேலும், மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் மற்றும் நகராட்சி கல்வி நிதி மூலம் ரூ.1.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகளை குத்திவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவர்களும் முழுமையான கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, 2025-26 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தில் உள்ள 14 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த 1 முதல் 5-ம் வகுப்புகள் பிரிக்கப்பட்டு தனி தொடக்கப் பள்ளிகளாக நிலை உருவாக்கப்படும் எனவும், தரம் உயர்த்தப்பட்டுள்ள 14 பள்ளிகளில் உள்ள தலா 3 பட்டதாரி ஆசிரியர்களோடு, மேலும் தலா 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு, அவை உபரி ஆசிரியர்களின் பணிநிரவல் மூலம் நிரப்பலாம் எனவும், அந்த பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக நிலை உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.அதன்படி, விருதுநகர் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியானது 08.06.1948 முதல் நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 14 ஆசிரியர்கள் உள்ளனர். 519 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தற்போது இந்த பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று  அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மேலும், மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் மற்றும் நகராட்சி கல்வி நிதி மூலம் ரூ.1.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகளையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.இரா.மதன்குமார், விருதுநகர் நகராட்சி ஆணையாளர் செல்வி சுகந்தி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 18, 2025

‘சமூக நீதி நாள்” உறுதிமொழியினை அமைச்சர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தந்தை பொியார் பிறந்த நாளான  (17.09.2025) ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள்  ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்   நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்  தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.முன்னதாக, தந்தை பொியார் அவர்களின் 147 ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது  படத்திற்கு  மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர், சிவகாசி மாநகராட்சி மேயர், அரசு உயர் அலுவலர்கள்  உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.தமிழக சட்டபேரவையில்  தமிழக முதலமைச்சர் அவர்கள் பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் -17 ம் தேதி ஆண்டுதோறும்  ‘சமூக நீதி நாளாக“ கொண்டாடப்படும் என அறிவித்தார்.அதன்படி,  சாதி ஏற்றதாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறி தள்ளி பெண்களை சம நிலையில் மதித்திடும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17-ம் நாள் ஆண்டுதோறும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டுமென அரசின் ஆணையின்படி,‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடையசெயல்பாடுகள் அமையும்.சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகியகொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக்கொள்வேன்.மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திடஇந்த நாளில் உறுதியேற்கிறேன்”.என்ற உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்  ஏற்றுக்கொண்டனர்.இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Sep 18, 2025

கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாம்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் (17.09.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கத்தின் (SWASTH NARI SASHAKT PARIVAR ABHIYAAN) கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமினை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கம்(SWASTH NARI SASHAKT PARIVAR ABHIYAAN) என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதுடன், தரமான மருத்துவ வசதிகள் மற்றும் விழிப்புணர்வை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.இத்திட்டத்தின் மூலம் 17.09.2025 முதல் 02.10.2025 வரை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் குறிப்பிட்ட சுகாதாரத் தேவைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.மேலும் இந்த 16 நாட்கள் தொற்று அல்லாத நோய்கள், புற்றுநோய்கள், ரத்த சோகை, காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கான சுகாதார பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வும், பரிசோதனை முகாம்களும், தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள்;, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும்; ஏற்படுத்தப்படவுள்ளது.அதன்படி, கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமினை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.இந்த திட்டத்தில் மாவட்ட முழுவதும் மருத்துவ வல்லுநர்கள், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே வந்து, பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான பரிசோதனைகள், ஸ்கிரீனிங், இரத்த சோகை பரிசோதனை செய்வதோடு, ஊட்டச்சத்து குறித்தும் ஆலோசனைகள் வழங்குவார்கள். இதன் மூலம் மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிந்தைய குழந்தை இறப்பு விகிதம் குறைக்கப்படும்.அதுபோல மாவட்டத்தில்; நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் மூலம் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.எனவே, இது போன்ற திட்டங்கள் மூலமாக மக்கள் பயனடைந்து தங்களது ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.17.09.2025 முதல் 02.10.2025 வரை ஒவ்வொரு வட்டாரத்திலும் இதுபோன்ற முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களுடைய நோக்கம் என்னவென்றால் வளமான பெண்கள், தாய்மார்களால் தான் வளமான இந்தியாவை உருவாக்க முடியும் என்பதற்காக தான்.பெண்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகளை முறையாக செய்ய வேண்டும். இப்பொழுது இருக்கின்ற நவீன அறிவியல் பரிசோதனைகளில் நம்முடைய ரத்த பரிசோதனைகளிலேயே அனைத்தும் தெரிந்து விடுகிறது.நோய் வருவதற்கு முன் நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.  சிறிய அளவில் இருக்கும் போது அதனை கண்டுபிடித்து அதற்கான மருத்துவ முறைகளை செய்வது முக்கியமானது.தமிழகத்தில் சுகாதாரத்தினுடைய வளர்ச்சி என்பது பிரம்மாண்டமாக இருக்கிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் மிகப்பெரிய அளவிலே தமிழக மக்களின் ஒவ்வொருவருடைய சுகாதாரம் மேம்பட்டு வருகிறது. இந்த முன்னேற்றம் தொடர்ந்து பல வருடங்களாக நடைபெற்று இருக்கக்கூடிய முன்னேற்றம். அதற்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிற மருத்துவ குழுவுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதாரத்தைச் சார்ந்த மற்ற அலுவலர்கள், பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்,  விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மருத்துவர்கள், பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 73 74 75 76 77 78 79 ... 140 141

AD's



More News