25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 20, 2024

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்

விருதுநகர் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தல்- 2024 முன்னிட்டு, விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,  (19.04.2024) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் 2024- க்கான வாக்குபதிவு இன்று  காலை 7.00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்களார்கள் வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்கள் வாக்குபதிவினை செய்ய ஏதுவாக பல்வேறு விரிவான ஏற்பாடுகளும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும், குடிநீர், நிழல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல்துறை உதவியுடன் விரிவான பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 7:00 மணி முதல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெற்ற வருகிறது.மேலும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியிலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள், மூத்தவாக்காளர்கள், திருநங்கை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Apr 20, 2024

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்குபதிவுகளை ஆய்வு

மக்களைவத் தேர்தல் -2024 யை முன்னிட்டு  (19.04.2024) விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்குபதிவுகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 304 வாக்குபதிவு மையங்களிலும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 311 வாக்குபதிவு மையங்களிலும், 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 286 வாக்குபதிவு மையங்களிலும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 277 வாக்குபதிவு மையங்களிலும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 256 வாக்குபதிவு மையங்களிலும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 255 வாக்குபதிவு மையங்களிலும்,  என மொத்தம் 1860 வாக்குசாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 188 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும், அதிக பெண் வாக்காளர்கள் உள்ள பகுதிகளில், பெண்களுக்கென்று தனித்துவமாக தலா 1 வாக்குச்சாவடி மையம் என மொத்தம் 7 பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் முழுவதும் பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாக்குபதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்திரிய மகளிர் நடுநிலைப் பள்ளி, வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரி,  திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கள்ளிக்குடி மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சிவரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருநகர் சி.எஸ்.இராமாச்சாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருநகர் முத்துத்தேவர் முக்குளத்தோர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும்,சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியான படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பெண்களால் நடத்தப்பட்டு வரும்  வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றுவரும் வாக்குபதிவினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Apr 20, 2024

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையமான நடையனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை ஆய்வு

மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு  (19.4.2024 )விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையமான நடையனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Apr 18, 2024

வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (17.04.2024) மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா, I A S., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1895 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 148 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.202- இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 15 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 203- திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 7 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 30 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 16 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 22 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 208- திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 38 தேர்தல் நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 148 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.நுண்பார்வையாளர்களாக வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்கள் தேர்தல் நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.தேர்தல் நுண்பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, வாக்குப்பதிவு அலுவலர்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிந்து, அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணித்து தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.குறிப்பாக, வாக்குப்பதிவு நாளில் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நல்ல முறையில் எந்தவொரு சந்தேகமுமின்றி மேற்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணிகளை நேர்த்தியாகவும், சிறப்பாக செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை முறையாக கண்காணித்து சம்மந்தப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில்  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிச்செல்வம், வங்கி பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Apr 18, 2024

தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவை ஊதியத்துடன் கூடிய விடுமுறை

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நாளன்று  (19.04.2024) தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க  அறிவுறுத்தி விருதுநகர் மற்றும் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்களின் கூட்டறிக்கை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன் படி தமிழ்நாட்டில் உள்ள  தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து  பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாக்கு பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை அளிக்காத  தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் இருப்பின் பொதுமக்கள்  மற்றும் தொழிலாளர்கள் கீழ்கண்ட கட்டுப்பாட்டு குழு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர்   தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 18, 2024

மக்களவை பொதுத் தேர்தல் 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது

மக்களவை பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 அன்று நடைபெறயுள்ளதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் 20.03.2024 முதல் 27.03.2024 வரை நடைபெற்றது. 28.03.2024 அன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு, 30.03.2024  அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு  சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 1,60,107 ஆண்கள், 1,65,332 பெண்கள், 37 இதர வாக்காளர்களும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1,35,309 ஆண்கள், 1,43,271 பெண்கள், 13 இதர வாக்காளர்களும், 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,12,699 ஆண்கள், 1,18,559 பெண்கள், 59 இதர வாக்காளர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1,13,988 ஆண்கள் 1,19,121 பெண்கள், 28 இதர வாக்காளர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1,06,097 ஆண்கள் 1,11,158 பெண்கள், 46 இதர வாக்காளர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,05,017 ஆண்கள் 1,11,079 பெண்கள், 22 இதர வாக்காளர்களும் என மொத்தம் 7,33,217 ஆண்கள், 7,68,520 பெண்கள், 205 இதர வாக்களர்கள் என ஆக மொத்தம் 15,48,825 வாக்களர்கள் உள்ளனர்.விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 188 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 148 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண்பார்வையாளர்களும், கூடுதலாக 26 தேர்தல் நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குபதிவு  பணிக்காக 195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 1460 வாக்குச்சாவடி அலுவலர்களும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1492 வாக்குச்சாவடி அலுவலர்களும், 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1380 வாக்குச்சாவடி அலுவலர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1350 வாக்குச்சாவடி அலுவலர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1262 வாக்குச்சாவடி அலுவலர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1243 வாக்குச்சாவடி அலுவலர்களும், என மொத்தம் 8187 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 4066 வாக்குபதிவு இயந்திரங்களும், 2033 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2202 விவிபேட் (வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 8000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 156 மண்டல குழுக்களும், 54 தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்களும், 54 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 6 வீடியோ கிராபர்களும்,  6  வீடியோ கண்காணிப்பு குழுக்களும், 6 கணக்கு குழுக்களும் பணியில் உள்ளனர்.தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையும், தேர்தல் கட்டுப்பாட்டு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-234600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உடைய C-VIGIL  என்ற தொலைபேசி செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம்.மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே, இந்த மக்களவைத் தேர்தல் 2024-ல் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், பணம்  மற்றும் பரிசு பொருட்கள் பெறாமல்  நேர்மையான முறையில் 100 சதவிகிதம் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 18, 2024

அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவை  வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில்  (17.04.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை  வலியுறுத்தி நடைபெற்ற முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர்.

Apr 18, 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் போட்டித் தேர்வு பயிற்சி கையேடு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை CSI பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நீட் போட்டித் தேர்வு பயிற்சி கையேட்டினை மாணவர்களுக்கு வழங்கினார்.

Apr 18, 2024

சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை ஒதுக்கீடு செய்யும் பணிகளை ஆய்வு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்  (17.04.2024) மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை ஒதுக்கீடு செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Apr 17, 2024

“என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, தேர்தல் நாளான ஏப்ரல்-19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்களுக்கு “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சென்றடையும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், இளம் தலைமுறை மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு வினாடி வினா, கலந்துரையாடல் நிகழ்ச்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், காபி வித் கலெக்டர், கபாடி, மாரத்தான், போட்டோ பாயிண்ட், செல்பி ஸ்டாண்ட், கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொலைபேசியில் இலச்சினை ஒட்டுதல், இருசக்கர வாகன பேரணி, மிதி வண்டி பேரணி,  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தேர்தல் நாளான ஏப்ரல்-19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்கள் 30 நபர்கள் கலந்து கொண்டு “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இந்த ஜனநாயக திருவிழாவில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்ஃ மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 70 71 72 73 74 75 76 77 78 79

AD's



More News